வியாழன், 11 ஜூன், 2015

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம்

பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மக்களின் கோரிக்கைகள் வாசகங்களாக தாங்கிய வண்ணம் இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.

கோரிக்கைகள்:


  • காணாமல் போனோரை மீட்டுக் கொடுத்தல்
  • காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துதல் (சர்வோதய நகர், கித்துள்)
  • காணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுத் தருதல்
  • வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (கித்துள்)
  • உள் வீதிகளை புணரமைப்பு செய்தல் (கித்துள்)
  • மலசல கூடப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருதல்
  • நிரந்தர குடிநீர் வசதி (சர்வோதய நகர்)
  • பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தை தடுத்து நிறுத்துதல்


போன்ற பல பிரச்சினைகளை முன்நிறுத்தி மறுமலர்ச்சி குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate