கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை கிராம பாடசாலையான விஷ்ணு மகாவித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதானத்தை முஸ்லிம்களால் அபகரிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாணவர்களும் அப்பிரதேச பொதுமக்களும் பொது அமைப்புக்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ்’ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ் கிரமமான பெரியநிலாவணைக் கிராமத்தின் விஷ்ணு மகாவித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதானத்தை அபகரிக்கும் இச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தங்கள் பாடசாலைக்குரிய விளையாட்டு மைதானமும் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் இவ் அமைதிப் போராட்டடத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்றைய தினம் மாகாண காணித் திணைக்களத்தால் குறிப்பிட்ட காணிகள் அளக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.







0 facebook-blogger:
கருத்துரையிடுக