மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 19 பேர் சுகாதார அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபை உணவு கட்டளை சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு முரணான முறையில் போலி லேபல்கள் பொறிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லடி பகுதியில் வர்த்தக நிலையங்கள் நேற்று மாலை திடீர் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வர்த்தக நிலையங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் போலி லேபலுடன் பொதி செய்யப்பட்ட 6 வகையான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்கள் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு வர்த்தகருக்கு தலா 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஏனைய சில வர்த்தகர்கள் மீது எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






0 facebook-blogger:
கருத்துரையிடுக