சிறைக்கைதிகள் சமூகத்; தலைவர்களாக மாறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக சிறைச்சாலைகள் ஐக்கியம் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தலைவரும் போதகருமான ஆர்.தயாசீலன் தெரிவித்தார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 25 கைதிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை அச்சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மத மாற்றம் முக்கியமல்ல. மன மாற்றமே முக்கியமாகும். முன்னாள் சிறைக்கைதிகள் பலர் திருந்தி சமூகத் தலைவர்களாக உள்ளனர். மன மாற்றம் ஏற்படும்போது அவர்கள் திருந்தும் சந்தர்ப்பமுள்ளது' என்றார்.






0 facebook-blogger:
கருத்துரையிடுக