ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலைய திறப்பு விழா.

களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலைய திறப்பு விழா இன்றைய தினம் (24.04.2016) மிகச் சிறப்பான முறையில் கோலாகலமாக களுவாஞ்சிகுடி நகரத்தினுடைய தலைவரும் முகாமை ஆலய பரிபாலன சபைத் தலைவருமான அ.கந்தவேள் தலைமையில் களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலையத்தில் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு மிக முக்கிய தேவையாக இருந்த களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பு நிலையம் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சராக இருந்த காலத்தில் கௌரவ. M.S.S அமீர் அலி அவர்களினுடைய நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டு துரிதமாக கட்டி முடிக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையம் இன்றைய தினம் களுவாஞ்சிகுடி பொது மக்களினுடைய பெரும் திரளான ஆதரவுடன் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் கௌரவ. M.S.S அமீர் அலி மற்றும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசகரும் ஐக்கியதேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான S.கணேசமூர்த்தி மற்றும் களுவாஞ்சிகுடி நகரத் தலைவர் அ.கந்தவேள் ஆகியோரினால் மிகச் சிறப்பான முறையிலே திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி. மூ.கோபாலரெட்ணம், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையினுடைய. வைத்தியட்சகர் Dr.கு.சுகுணன், வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.புள்ளைநாயகம், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையளர் திரு.சித்திரவேல், இலங்கைப் போக்குவரத்து சபையினுடைய பிராந்திய முகாமையாளர் தேசமான்ய.சித்திக் மற்றும் கிராமத்தினுடைய கௌரவ அதிதிகள் கழங்கள் அமைப்புகளினுடைய பிரதிநிதிகள் களுவாஞ்சிகுடி பிரதேச வாழ் பொது மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்ததுடன் இந் திறப்பு விழா மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.














Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624980

Translate