செவ்வாய், 31 மே, 2016
ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி நாளை மட்டில் கவனயீர்ப்பு போராட்டம்
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை புதன்கிழமை காலை 9.00மணியளவில் நடாத்தவுள்ளது.
புதன், 25 மே, 2016
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு ஸ்ரீநேசன் (பா.உ) கண்டனம்
2016.05.24 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரை தாக்கிய சம்பவம் குறித்து மட்டக்களப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது அன்றைய நிகழ்வு பற்றி நான் ஊடகவியலாளருக்கும்¸ மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாட்டில் இருக்கின்றேன். கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
திங்கள், 23 மே, 2016
தேற்றாத்தீவு மக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கலியாண சடங்கு
மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மனின் வருடந்த கலியாண திருச்சடங்கின் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.05.2016) தேற்றாத்தீவு பொது மக்களின் ஏற்றாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 10.00 மணிக்கு வசந்தன் கும்மி கோலாட்டம் என்பன ஆடப்பட்டு பூசை பொருட்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னதாமும் அதனை தொடந்து மாலை 04.30 மணியளில் கண்ணகை அம்மனின் கலியாண திருச்சடங்கு இடம் பெற்றது.
ஞாயிறு, 22 மே, 2016
நாளை விடுமுறை இல்லை.
(பழுவூரான்)
சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் காரணமாக நாளை திங்கட்கிழமை ஏற்கனவே விடுக்கப்பட்ட அரசவிடுமுறை மீளப்பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளளார்.
மட்டு. பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு.
(பழுவூரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் இன்று 22.05.2016 காலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடராசா நடேஸ்வரன்(47)
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் இன்று 22.05.2016 காலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடராசா நடேஸ்வரன்(47)
சனி, 21 மே, 2016
காத்தான்குடி உணவகத்தில் ரொட்டிக்குள் ஆணி.
போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு.
வியாழன், 19 மே, 2016
அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
புதன், 18 மே, 2016
தும்பங்கேணியில் ஜனா தலைமையில் முழுநாள் சிரமதானம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்( ஜனா) அவர்களின் முழு அனுசரணையுடனும், நேற்று 17.05.2016 முழுநாளும் கொச்சிபாம் ,தும்பங்கேணி பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும் கொச்சிபாம் பொது விளையாட்டு மைதானம் மற்றும்
முதுகெலும்பு அற்ற இணையத்தளங்கள் என் மீது சேறு பூச முனைகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவருமான ச.வியாழேந்திரன் ஆகிய என் மீது சில முதுகெலும்பு அற்ற இணையங்கள் சேறு பூச முனைகின்றது.
சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யப் போவதாக தவறான செய்திகளை பிரசுரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்ப்படுத்துவது எனக்கு வேதனை அளிக்கின்றது.
ஞாயிறு, 15 மே, 2016
மட்டக்களப்பு ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பாற்குடப் பவனி
ஈச்சந்தீவு என்னும் எழில் மிகு கிராமத்தில் கோயில் கொண்டு
வீற்றிருந்து அடியவர்களுக்கு எல்லாம் அருள் மழை வாரி வழங்குகின்ற கற்புக்கரசியாம் கண்ணகி அம்மாளின் வருடாந்த அலங்கார உற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக இன்று மாபெரும் பாற்குட பவனி மட்டு நகர் நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தானத்தில் இருந்து ஆரம்பமாகி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிக பக்தர் கூட்டம் அம்மாளின் புகழ் பாடி அரோகரா அரோகரா என்று அணி அணியாய் திரண்டு வந்து பாற்குடங்களை தலையில் சுமந்தபடி வந்து ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து சகஷ்ட நாம 108 சங்காபிஷேகமும் இடம்பெற்றது
வியாழன், 12 மே, 2016
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கு மூன்று ஆண்டு திட்டத்தை தயாரிக்குமாறு பணிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கல்வி வலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் மூன்று ஆண்டு செயற்றிட்டத்தினை தயாரிக்குமாறு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் காத்தான்குடியில் வீதி விபத்துக்கான பூச்சாடிகள் அகற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் அன்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வந்தமை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும். இவ்வதிகரித்துவரும் வீதி விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து இதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த மாதம் 2016.04.19ஆந்திகதி (செவ்வாய்கிழமை) காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
புதன், 11 மே, 2016
சதுர்த்தி விரதமும் உள்வீதி திருவிழாவும்- கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் -(Video)

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(10.05.216) செவ்வாய்கிழமை சித்திரை மாத வளர் பிறை சதுர்தி விரதம்,உருத்திரா அபிஷேகம்,வசந்த மண்டப பூஜை மற்றும் உள் வீதி திருவிழா என்பன இடம் பெற்றது இதனை கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குழு க.கு.சீதாராம குருக்கள் அவர்களினால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.சதுர்த்தி விரதம் மற்றும் பூஜையில் கலந்து கொள்ள தேற்றறாத்தீவு கிராமம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களில் இருக்கும் அடியார்கள் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டர்.




மகிழூரம்பதியின் காவலாள் கண்ணகிக்கு அலங்கார உற்சவம்-2016
மட்டக்களப்பின் தெற்கே 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மகிழூர் கிராமத்தில் வீற்றிருந்து மக்களின் நோய் , பிணி தீர்த்து வரமருளும் கற்புக்கரசியாம் கண்ணகிக்கு மகிழூர் பெரும் பிரதேச மக்களால் ஆண்டுதோறும் எடுக்கப்படும் வருடாந்த திருச்சடங்கு இவ்வருடமும் 15.05.2016 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 21.05.2016 திருக்குளிர்த்தி நிகழ்வுடன் இனிதே நிறைவுற இருக்கின்றது .
15.05.2016 பணிக்கொணா குடிமக்களின் ஆலய திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பித்து
இரண்டாம் நாள் பகல் 16.05.2016 தனஞ்சனார் குடி மக்களின் கன்னிக்கால் வெட்டும் சிறப்பு நிகழ்வு
இரண்டாம் நாள் இரவு 16.05.2016 விளங்காமத்தான் குடி மக்களின் திருக்கல்யாணச்சடங்கும்
மூன்றாம் நாள் 17.05.2016 விளங்கமத்தான் குடி மக்களிடம் இருந்து படையாட்சி குடி மக்களினால் கூறைதாலி மாறும் நிகழ்வு, திருமாங்கல்யதாரணம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்று
அதனை தொடர்ந்து
படையாட்சி குடி சங்கரப்பெத்தான் குடி, களுவத்தன் பணிக்கன் குடி மக்களின் திருச்சடங்குகள் இடம் பெற்று
20,05,2016 அன்று பகல் வட்டுக்குத்து சிறப்பு நிகழ்வு இடம்பெற்று
21.05.2016 பெத்தான் குடி மக்களின் அம்மன் திருக்குளிர்த்தி சிறப்பு நிகழ்வுடன் அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுற இருக்கின்றது.
செவ்வாய், 10 மே, 2016
திங்கள், 9 மே, 2016
கட்டாருக்கு தொழிலுக்கு சென்றவரிடம் இருந்து ஆறு மாதமாக தொடர்பில்லை –கண்டுபிடித்து தருமாறு தாய் மன்றாட்டம்
மத்திய கிழக்கிலுள்ள கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற தனது மகன் பேரானந்தம் செந்தூரன் (வயது 22) கடந்த ஆறு மாதங்களாக தொடர்பறுந்த நிலையில் காணாமல் போயிருப்பதாக அவரது தாய் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிலும்; முறையிட்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் மக்கள் பற்றிய அக்கறையும் என்கிறார் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன்
தகவல்-கஜரூபன்
யுத்தத்தில் சிக்குண்டு தமிழ் மக்கள் வேதனையில் தவித்தபோது மஹிந்த அரசாங்கத்துடன் இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாது தனது சுகபோக அரசியலில் வாழ்ந்துவிட்டு இன்று தன்னால் எதுவும் முடியாத நிலையில் போலி வார்த்தைகளையும் கொக்கரிப்புக்களையும் செய்து வருவது வேடிக்கையான விடயமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது. ஆனால் எமது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பானது இவர்களது எந்தவிதமான கொக்கரிப்பிற்கும் அடிபணியாது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரு மான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித் தார்.திருக்கோயில் விபுலானந்தா அகடமி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கும், கல்வி யியற்கல்லூரிகளுக்கும் தெரிவான மாணவர்களையும், கல்விப்பொது சாதாரண தரப்பரீட்சையில் அதியுயர் சித்திகளை பெற்ற மாண வர்களையும் பாராட்டி கௌரவித்து விருது வழங்கும் விழாவானது சனிக்கிழமை திருக் கோயில் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
ஞாயிறு, 8 மே, 2016
சாதாரன மாணவர்களுடன் சேர்ந்து விசேட தேவையுடையவர்களும் கல்வி கற்பதன் மூலமே நாமும் சமமானவர்கள் என்ற மன தைரியம் தோன்றும் - பொறியியலாளர் சிப்லி பாறுக்
விஷேட தேவையுடையவர்களை ஒதுக்குவது அல்லது தனியாக வேறுபடுத்தி பார்ப்பது என்பது அவர்களுக்கு இடையே தாழ்வு மனப்பான்மையினை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற புகலிடம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை தெரன்ஸ் அவர்களின் முயற்சியினால் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் விஷேட தேவையுடையவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனியானதோர் வகுப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசேட தேவை உடைய மாணவர்கள் ஏனைய சிறுவர்களுடன் இணைந்ததாக தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் விசேட தேவையுடைய மாணவர்களும் ஏனைய மாணவர்களைப் போல நாங்களும் சமமானவர்கள் எனும் உளநிலை ஏற்பட ஏதுவாக இருக்கும். இது உண்மையில் பாராட்டத்தக்கதோர் விடயமாகும். இதைப்போன்ற கற்றல் நிலையங்கள் எமது பகுதிகளிலும் உருவக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதன் போது விசேட தேவையுடைய மாணவர்களை எவ்வாறு சாதாரண பாடசாலைகளில் சேர்ப்பது இதற்குத் தேவையான ஆசிரியர்கள் ,விசேட உபகரணங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளுதல் என்பன போன்ற மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
எனவே இவ்வாறான கற்றல் நிலையங்களை எமது பகுதிகளிலும் உருவாக்குதல் தொடர்பான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக 2016.05.05ஆந்திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் அருட்தந்தை அவர்களை நேரில் சென்று சந்தித்தார்.
பரீட்சாத்த நடவடிக்கையாக இந்த செயற்திட்டத்தை புகலிடம் அமைப்பின் ஆலோசனையையும் பெற்று நடைமுறைப்படுத்துவதற்காக காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய கிராமங்களிலுள்ள இரண்டு பாடசாலைகள் அடையாளங்காணப்பட இருப்பதுடன் இது வெற்றியளிக்கும் பட்சத்தில் காத்தான்குடியில் உள்ள சில பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் இதனை விஸ்தரிக்க முடியும் என மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பான விழிப்பூட்டல் ஒன்றை சாதாரண மாணவர்களிடையே ஏற்படுத்தல் மூலமாகவும் இரு தரப்பு மாணவர்களிடமும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தல் மூலமாகவுமே விசேட தேவையுடைய மாணவர்கள் சாதாரண பாடசாலையில் கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என இனங்காணப்பட்டதுடன் இம்முறையை அமுல்படுத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் அத்துடன் விசேட தேவையுடையவர்கள் எவரிலும் தங்கி வாழாமல் அவர்கள் சுயமாக தொழில் செய்து தங்களது தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தேசிய தொழில் சார் தகைமையினை உள்ளடக்கியதாக தொழில் பயிற்சிகளும் வழங்குவதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஞா.ஸ்ரீநேசன் அவர்களது புதிய பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சி.
சனி, 7 மே, 2016
மட்டுநகரில் கிரிக்கட் வீரர்களை உருவாக்கி சாதனை படைப்போம்………
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 19 வயதிற்குட்பட்ட பாடசலை மட்டத்திலான மகானங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்த கொண்டோரை கௌரவிக்கும் நிகழ்வு 06.05.2016 அன்று இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வை இந்துக்கல்லூரி ஏற்பாடு செய்து நடாத்தியது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகான கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய செல்வன்.தேனுரதன், போட்டிகளில் கலந்த கொண்ட செல்வன்.சாருகன், பாடசாலை மட்ட பயிற்றுவிப்பாளர் திரு.ஜவ்வனன், மாவட்ட மட்ட பயிற்றுவிப்பாளர் அன்வர் டீன் மற்றும் அவ்வணியை ஒழுங்கமைத்து அழைத்துச்சென்ற மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளார் திரு.பிரதீபன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினரால் இந்துக்கல்லூரி கிரிக்கெட் அணியினருக்கு கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கி வைக்கட்டது. பாடசாலைக்கான உபகரனங்களை அதிபா திரு.அருள்பிரகசத்திடமும், பயிற்றுவிப்பாளருக்கான உபகரனங்களை இந்துக்கல்லூரி பயிறுவிப்பாளர் திரு.ஜவ்வனனிடமும் கோட்டைமுனை விளையாட்டு கழக மூத்த உறுப்பினர்களான சிவநாதன் அவர்களாலும், வசீகரன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் 1970ம் ஆண்டுகளில் கோட்டைமுனை மகாவித்தியாலத்தில் கல்வி கற்ற போது தான் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தை தாங்கள் தான் உருவக்கியதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரான திரு.சிவநாதன் அவர்கள் நினைவு கூர்ந்தர். அதிபர் தனதுரையில் கோட்டைமுனை விளையாட்டு கழகம் தங்களுக்கு ஆற்றிவரும் சேவை மதிப்பிட முடியாதது எனக்கூறினார். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளார் பிரதீபன் தனதுரையில் செல்வன்.தேனுரதன் ஒரு சிறந்த வீரர் என கிழக்கு மாகான கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் நிரோசன் பண்டாரதிலக்க குறிப்பிட்டதாக கூறியதுடன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினரால் தேனுஜனுக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான
Bloomfield Cricket Club
கழகத்தில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த லண்டன் கோட்டைமுனை கழகத்திற்கும் தன் பாராட்டையும் வாழத்துக்களையும் தெரிவித்தார்.
பாலசிங்கம் ஜெயதாஸன்

வெள்ளி, 6 மே, 2016
மட்டு பெரியபோரதீவு மாணவிகள் தேசிய மட்டத்தில் சாதனை

பட்டிருப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவிகள் அரச நடன போட்டித் தொடரில் தேசிய மட்டத்தில் சிரேஷ்ட பிரிவில் செம்பு நடனப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், பட்டிருப்புக் கல்வி வலையத்திற்கும் மற்றும் போரதீவுப் பற்றுக் கோட்டத்திற்கும் பெருமை
வியாழன், 5 மே, 2016
மட்டு 38ம் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை.
மட்டு மாவட்டத்தில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை 38ம் கிராமத்திலுள்ள 5ம் வட்டாரத்தில் இனந்தெரியாத நபர்களினால் திக்கோடையைச் சேர்ந்த லோகிசன் என்பரிவன் மோட்டார் சைக்கிள் நேற்றிரவு(04) தீயிட்டு முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.
புதன், 4 மே, 2016
கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு இடையூறு - தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்
மட்டக்களப்பு வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.