புதன், 20 மே, 2015

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ளக வீதிகளை காபட் இடும் பணிகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள வீதிகள் மற்றும் டெனிஸ் விளையாட்டரங்குகள் காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கிழக்கு பல்கலைக்கழகம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த காபட் இடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாhரசபையின் நிறைவேற்றுப்பொறியியலாளர் நா.சசிநந்தன் தெரிவித்தார்.

இதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதாகவும் பொறியிலாளர் தெரிவித்தார்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ளக வீதிகள் அனைத்தும் காபட் இடப்பட்டுவருவதாகவும் அத்துடன் டெனிஸ் விளையாடும் பகுதியும் காபட் இடப்பட்டுள்ளதாகவும் நிறைவேற்றுப்பொறியியலாளர் நா.சசிநந்தன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுவந்ததாகவும் ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையே அவற்றினை மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.










Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate