செவ்வாய்க்கிழமை இவர் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கடந்த வருடம் கிழக்குப் பல்கலைக் கழக அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்ய வந்தபோது சூழல் பாதுகாப்பு மற்றும் பல்கலைக்கழக இயற்கை அழகு படுத்தலுக்காக 20 பேரீச்ச மரங்களை நாட்டும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
எனினும், அன்றிரவே இந்த பேரீச்சை மரங்கள் பிடுங்கப்பட்டுக் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அந்தக் குற்றச் சாட்டுச் தொடர்பாக வழக்குக்கு சமூகமளிக்காது இருந்து வந்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மாணவனே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இவர் மீதான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.வர்த்தகப் பிரிவின் மூன்றாம் ஆண்டு மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக