(Vanchi Oli)கிழக்கிலங்கையின்
பெரும் பழம் பதியாம் களுவாஞ்சிகுடி நகரம் எங்கும் களுவாஞ்சியின் காவலாள்
தெய்வம் கற்புக்கரசி கண்ணகைக்கு மக்கள் விழா எடுத்துக் எடுத்தார்கள்.
வைகாசித் திங்கள் வருவேன் என வரங்கொடுத்த தாயே! என்பதற்கிணங்க கடந்த
25.05.2015 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான அம்பாளின் திருச் சடங்கானது
மிக சிறப்பான முறையிலே இடம்பெற்று நிறைவடைந்திருக்கிறது.
30.05.2015
மிக சிறப்பான முறையில் கன்னிக்கால் வெட்டு விழா இடம்பெற்று மறு நாள் காலை
கண்ணகியின் திருக்கல்யாணப் பூசை இடம்பெற்றதுடன் நேற்றைய தினம்
களுவாஞ்சிகுடியின் பழம் பெரும் குடியாம் கவுத்தன்குடி மக்களின் நெல்
குற்று பூசை இடம் பெற்றதோடு அதிகாலை பானை எழுந்தருளப் பண்ணல்,
திருக்குளிர்த்தி வைபம் என்பன மிக சிறப்பான முறையில் இடம்பெற்று காலை 8.30
மணியளவில் திருக்கதவு பூட்டுதலுடன் அம்பாளின் திருச்சடங்கு நிறைவுற்றமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எதிர்வரும் 09.06.2015 8நாள் தெளிவு சடங்கு பூசையும் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
கற்புக்கரசி காவலாள் கண்ணகையின் அருள் எம் மக்கள் எலோருக்கும் கிடைக்க கண்ணகியை வேண்டி பிரார்த்திக்கிறோம்.
































































0 facebook-blogger:
கருத்துரையிடுக