வெள்ளி, 4 டிசம்பர், 2015

 இந்துமா மன்ற 60ஆவது ஆண்டு விழா

அகில இலங்கை இந்து மா மன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா,  சிவதொண்டர் மாநாடு, நாவலர் நினைவு ஆன்மிக எழுச்சிக் கருத்தரங்கு ஆகியன நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பு, நாவற்குடா சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன அரங்கில் நடைபெறவுள்ளன. 

நாளையதினம் காலை நாவற்குடா பேச்சியம்மன் கோவிலிலிருந்து ஆன்மிக எழுச்சி ஊர்வலம் ஆரம்பமாகி, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் அரங்கை சென்றடைந்த பின்னர்  நிகழ்வுகள் நடைபெறும். மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள், சமூகத்தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் புனர்வாழ்வளிப்பு,  மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு இரதமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே, இந்நிகழ்வுகளில் பொதுமக்களையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate