அண்மையில் பெய்த அடைமழையின் காரணமாக வெள்ளத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான கூரை தகடுகள் வாசம் உதவும் உறவுகள் அமைப்பால் வழங்கிவைப்பு அண்மையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வந்தாறுமூலை கிராம சேவகர் பிரிவில் உள்ள குடிசைகளில் வாழும் மிகவும் வறிய மக்களுக்கான கூரை தகடுகள் ஒரு தொகுதியை வாசம் உதவும் உறவுகள் அமைப்பினர் பகிர்ந்தளிதுள்ளனர்.
தொடர்ந்து தாய் தந்தையை இழந்து வாழும் மாணவர்களுக்கான கற்றல் உபகர்ணங்களையும் வாசம் உதவும் உறவுகள் அமைப்பினால் வழங்கி வைக்கபட்டுள்ளது. இவ் நிகழ்வில் கிராம சேவகர் கோகிலாராஜ் சமூக சேவையாளரும் இலங்கை செஞ்சிலுவ சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வசந்தராஜா, வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், பொருளாளர் வி.ஜீவராஜா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இவ் உதவிகளை வாசம் உதவும் உறவுகள் அமைப்பு புலம் பெயர்ந்து வாழும் உறவுகளின் உதவிகள் மூலம் பெற்றுக்கொண்டு தாயகத்தில் வாழும் யுத்தத்தினால் மற்றும் இயற்கை அனார்த்தத்தினால் பாதிக்கபட்டு கணவனை இழந்து வாழும் உறவுகளுக்கான வாழ்வாதாரம் மற்றும் தாய் இதந்தையை இழந்து வாழும் மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளையும் வழங்கி கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.






























0 facebook-blogger:
கருத்துரையிடுக