சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு கடற்கரை வீதியில் நேற்று 07ம் திகதி பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
காரைதீவு கடற்கரை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இரு உந்துருளிகள் (மோட்டார் சைக்கில்கள்) நேருக்கு நேர் மோதுண்டதால் மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த நால்வரும் படுகாயமடைந்த நிலையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் காரைதீவைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.














0 facebook-blogger:
கருத்துரையிடுக