மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையிலான சினேகபூர்வ மென்பந்து கிறிக்கட் சமர் நேற்று (29) பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு , இன்று (30) இறுதிப் போட்டிகள் சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றன.
வெள்ளி, 30 செப்டம்பர், 2016
வியாழன், 29 செப்டம்பர், 2016
ஆரையம்பதி பிரதேச செயலக சிநேகபூர்வ கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்
ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்று (9) மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான போட்டிகளை பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி ஆரம்பித்துவைத்தார்.
திங்கள், 26 செப்டம்பர், 2016
கோவில்போரதீவு உதயதாரகை வி.கழகத்தால் மென்பந்நு கிரிக்கெட் சுற்றுப்போட்டி
(பழுவூரான்)
மட்டக்களப்பு
படுவான்கரையில் பல ஆண்டுகளாக வெற்றிவாகை சூடிய கோவில் போரதீவு உதயதாரகை விளையாட்டுக்
கழகம் எதிர்வரும் 01,02,08,09ம் திகதிகளில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை
வியாழன், 22 செப்டம்பர், 2016
கல்விக்காக ஏங்கும் திக்கோடை – தும்பாலை சிறார்கள்.
(திக்கோடை தும்பாலையில் இருந்து ஒரு நேரடி றிப்போர்ட்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான போரதீவுப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடை கிராமத்தின் பிரிவான தும்பாலைப் பிரிவானது அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற ஒரு கிராமமாகும். இங்கு காட்டுயானைகளின் அட்டகாசம் நிறைந்தது மட்டுல்லாமல் அண்மையில் காட்டுயானை தாக்கி மூன்று பேர் மரணித்த சம்பவமும் இந்த கிராமத்திலே இடம்பெற்ற அவலச் செய்தியாகும்.
இவரைக் காணவில்லை. திக்கோடையில் சம்பவம்.
புதன், 21 செப்டம்பர், 2016
கலை நிகழ்வு பகிர்வு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும ம.தெ.எ பற்று பிரதேச செயலகமும் இணைந்து செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்;தின் ஒத்துழைப்புடன் பதிவு செய்யப்பட் கலைக்கழகங்களுக்கான கருத்து பகிர்வு நேன்று(20.09.2016) செவ்வாய்கிழமை செட்டிபாளையம் சிறுவர் சிநேக பூர்வ நிலையத்தில் நடைபெற்றது. ம.தெ.எ பற்று பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச சபைகளை நகர சபையாக மாற்றுவதற்கான தனிநபர் பிரேரணை. மாகாண சபை உறுப்பினர் ஜனா
(பழுவூரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு பிரதேச சபைகளான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளை நகரசபையாக்கும் தனிநபர் பிரேரணையினை இம்மாத மாகாண சபை அமர்வில் முன்வைப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
திங்கள், 19 செப்டம்பர், 2016
குருக்கள்மடத்தில் வாகன விபத்தில் ஒருவர் பலி (Photos)
(பிரகாஸ்)
சனி, 17 செப்டம்பர், 2016
சித்தாண்டி கந்தனின் தீர்த்தோற்சவத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக திகழும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் பிரணவ சரவணப் பொய்கை தீர்த்தோற்சவமானது ஆயிரக் கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக இன்றைய தினம் (16) சித்தாண்டி உதயன்மூலை சரவணப் பொய்கையில் உற்சவ கால பிரதம குர சிவாகம பிரினா சிவஸ்ரீ வாமகைலாசதாச குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
புதன், 14 செப்டம்பர், 2016
தம்பலவத்தை இளைஞர் கழகத்திற்கு அன்பளிப்பு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழகங்களின் வருடந்தோறும் இட்பெறும் YOUTH GOT TALENT வேலைத்திட்டத்திற்கமைவாக பலவேலைத்திட்டங்கள் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது. இவ்வேலைத்திட்டத்திற்காக கிழக்கு
பழுகாமம் கபடியில் தேசிய மட்டத்தில் வெள்ளிப்பதக்கம்.
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 19 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி அணியினர் பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டியானது கடந்த 10.09..2016ம்திகதி
இராமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு பல வாழ்வாதார உதவிகள்.
மட்டக்களப்பின் பட்டிருப்புத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கம் அவர்களின் நாமத்தில் உருவான மக்கள் அமைப்பு தற்போது ஒருவருடத்தை கடந்த நிலையில்
வசந்தம் கூத்துக்கு கலைவடிவம் கொடுத்த சிகண்டி பண்ணிசை பாடசாலை
தமிழர்களின் வரலாற்று பாரம்பரியம், கலை, கலாசாரத்தின் அடியொற்றியதான பண்பாடுகள் பல இன்றைய நவீன யுகத்தில் மாற்றமடைந்து வருகின்றது என்கின்ற தோற்றப்பாடுகளுடன் கூடிய அறிக்கைகள் அமைந்தாலும் எங்கோ ஒரு மூலையில் தமிழ் சமூகத்தின் கலைகள் அரங்கேரிக்கொண்டு மரபுகளையும் மரபுக்கலைகளையும் பேணிப்பாது பாதுகாத்துக் கொண்டுதான் செல்கின்றதை அவதானிக்க முடிக்கின்றது.
செவ்வாய், 13 செப்டம்பர், 2016
வெள்ளி, 9 செப்டம்பர், 2016
யானை தாக்கி உயிரிழந்த ஷர்மிலாவின் குடும்பத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் உதவி
(பழுவூரான்)
வாழைச்சேனை மாவேடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியான 11 வயதுடைய ரவீந்திரன் - ஷர்மிலா கடந்த 03.09.2016ம் திகதி சனிக்கிழமை சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் வைத்து காட்டுயானையால் தாக்கி உயிரிழந்தார். அத்துடன்
வியாழன், 8 செப்டம்பர், 2016
செவ்வாய், 6 செப்டம்பர், 2016
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மாவேலனின் தோரோட்டம்
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான புடைசூழ நேற்று இடம்பெற்றது. திராவிட முகப்பத்திர முறையில் அமைந்த அழகிய சித்திரத் தேரினிலே பஞ்சமுக விநாயகன் பவனிவந்தார்.
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விரதமும் திருவிழாவும்
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விரதமும் திருவிழாவும் ஆவணி சதுர்த்தி தினமான (05.09.2016) அன்று திங்கட்கிழமை காலை விரம் அனுட்டிக்கும் அடியவர்களுக்கு சங்கர்ப்பம் பண்ணும் நிகழ்வுடன் ஆரம்பித்தது அதனை தொடர்து மாலை 04.30 மணியளவில் தேற்றாத்தீவு வட பத்திர காளி அம்பாள் ஆலயத்தில் இருந்து சந்தணகுடபனி ஆரம்பித்து தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் முல மூர்திக்கு சந்தணாபிஷேகம் இடம் பெற்றது.
திங்கள், 5 செப்டம்பர், 2016
மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப நிறுவன மாணவன் அமெரிக்கா பயணம்
அமேரிக்காவில் வருடாவருடம் நடைபெறுகின்ற நீர் முகாமைத்துவம் மற்றும் புத்தாக்கம் ""WaterSmart
Innovations 2016"" தொடர்பான மாநாட்டிற்கு மட்டக்களப்பு
உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் கல்வி கற்கும்
மாணவன் கிஷோத் நவரெட்ணராஜா அவர்கள் 2016ம் ஆண்டிற்கான அமர்விற்கு வருகின்ற
ஓக்டோபர் மாதம் அமெரிக்கா பயணமாகவுள்ளார்.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2016
நாளை ஸ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலய தேரோட்ட நிகழ்வு
தட்சணகைலாயம் எனப்போற்றப்படும் கிழக்கு மாகாணத்தில் நீண்ட கால வரலாற்று சிறப்பினைக்கொண்டதாக திருப்பழுகாமம் மாவேற்குடா அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயம் இருந்துவருகின்றது. இதன் வருடாந்த மஹோற்சவம் கடந்த 26.08.2016 கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சனி, 3 செப்டம்பர், 2016
150 வது பொலிஸ் ஆண்டு நிறைவு வைபவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில்
(வாசு)
இலங்கை பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டு 150 ஆண்டு நிறைவு வைபவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இன்று (03.09.2016) சனிக்கிழமை காலை 07.30 மணிக்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம் பெற்றது.இதன் போது பொலிஸ் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து பொலிஸ்கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ்மா அதிபரின் செய்தியினை நிலையப்பொறுப்பதிகாரியிளால் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
வெள்ளி, 2 செப்டம்பர், 2016
வரலாற்று சிறப்புபெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் மகோற்சவ கொடியேற்றம்
(சித்தாண்டி நிருபர்)
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக திகழும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் மகோற்சவ கொடியேற்றமானது பெரும் திரளான அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக நேற்று (1) உற்சவ கால பிரதம குர சிவாகம பிரினா சிவஸ்ரீ வாமகைலாசதாச குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.