மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையிலான சினேகபூர்வ மென்பந்து கிறிக்கட் சமர் நேற்று (29) பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு , இன்று (30) இறுதிப் போட்டிகள் சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றன.
10 ஓவர்களை கொண்ட போட்டியில் 4 அணிகள் பங்குபற்றியதில் கிறீன் வுறு அணியியனர் வெற்றியினை தமதாக்கிக் கொண்டனர்.
10 ஒவர்களில் 111 ஓட்டங்களை பெற்று முதலில் துடுப்பெடுத்து ஆடிய கிறீன் வுறு அணியிரை எதிர்த்தாடிய வுலு டயமன்ட் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 91 ஒட்டங்களைப் பெற்று இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் திருமதி என்.சந்தியானந்தி அவர்களும் உதவி பிரதேச செயலாளர் பி. லக்ஷன்யா அவர்களும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து வெற்றி கிண்ணங்களை வழங்கிவைத்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக