வெள்ளி, 9 செப்டம்பர், 2016

யானை தாக்கி உயிரிழந்த ஷர்மிலாவின் குடும்பத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் உதவி

(பழுவூரான்)
வாழைச்சேனை மாவேடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியான 11 வயதுடைய ரவீந்திரன் - ஷர்மிலா கடந்த 03.09.2016ம் திகதி சனிக்கிழமை சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் வைத்து காட்டுயானையால் தாக்கி உயிரிழந்தார். அத்துடன்
அவருடைய தங்கையும் தாக்கப்பட்டு தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டார்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளரான இ.சாணக்கியன் அவர்கள் அந்த குடும்பத்தை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தேரவயான சில உலர்உணவுப் பொருட்களை பெற்று கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் ஷர்மிலாவின் தங்கையான துர்ஷிகா மற்றும் தங்கைகளுக்கான கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தங்களின் அமைப்பு  பொறுப்பெடுத்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624968

Translate