புதன், 14 செப்டம்பர், 2016

இராமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு பல வாழ்வாதார உதவிகள்.

(பழுவூரான்)
மட்டக்களப்பின் பட்டிருப்புத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கம் அவர்களின் நாமத்தில் உருவான மக்கள் அமைப்பு தற்போது ஒருவருடத்தை கடந்த நிலையில்
இவ்வமைப்பின் மூலம் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலர் பல்வேறுபட்ட  வாழ்வாதார உதவிகள் மற்றும் கற்றலுக்கான உதவிகள் போன்றவற்றை பெற்று இன்று நிம்மதி பெருமூச்சுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் விதவைகள் முன்னர் சுயதொழிலின்றியும் அன்றாட வாழ்க்கைச்செலவுகளுக்கும் ஊசலாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இன்று ஒளியேற்றிய பெருமை இந்த இராசமாணிக்கம் மக்க்ள் அமைப்பையே சாரும்.இந்த வகையில் நேற்று இந்த அமைப்பினை அங்குராப்பணம் செய்து ஒருவருட பூர்த்தி நிறைவானது. அன்றைய தினம் ஓந்தாச்சிமடத்தினைச் சேர்ந்த செல்வி. ஜனனி அவர்களுக்கு சுயதொழிலுக்காக தையல் இயந்திரமும் அதற்கான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இவர் தாயைம், தந்தையையும் இழந்து தனது மாமியுடன் வாழ்;க்கையை கழித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னுமொருவருக்கு இடியப்பம் அவித்து விற்கும் சுயதொழிலுக்கான பாத்திரங்களும் அதற்கான ஏனைய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல வாழ்வாதார உதவிகள் நேற்றைய தினம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய பணிப்பாளர் சாணக்கியன் அவர்கள் தெரிவிக்கையில் 'இந்த அமைப்பானது மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அதனூடாக அவர்களினுடைய வறுமையை ஒழித்து அன்றாட வாழ்க்கையை சீராக நடாத்துவதே இதனுடைய நோக்கமாகும். அதே போன்று வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான கற்றலுக்கான வசதிகளை செய்து கொடுக்கும் போது நாளைய சமூதாயம் வறுமை மற்றும் ஏனைய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்காமல் வாழ வழிகோலும் எனவும் தெரிவித்தார். 



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate