ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மட்டுநகர் கோட்டைமுனை கழக வீரர் 15 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்று சாதனை

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடாத்தும் கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்  கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கோட்டைமுனை விளையாட்டு கழக வீரர் த.வினோதன் 15 பந்தகளுக்கு முகம் கொடுத்து 50 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் கழகங்களுக்கிடையிலாக நடாத்தும் 50 ஓவர்  கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கும் கல்லாறு விளையாட்டு கழகத்திற்குமான போட்டியானது கல்லாறு விளையாட்டு மைதானத்தில் 14.02.2015 அன்று நடைபெற்றது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்லாறு விளையாட்டு கழகத்தினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டகளை பெற்றது. இதில் தனுராஜ் 30 ஓட்டங்களை பெற்றர் பந்து வீச்சில் டிலக்சன் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் சாரு 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டமுணை விளையாட்டு கழகம் 6 பந்து வீச்சு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்களை பெற்று வெற்றிவாகை சூடியது. இதில் வினோதன் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளை எதிர் கொண்டு 65 ஓட்டங்களையும், டெனிக் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளை எதிர் கொண்டு 23 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் த.வினோதன் 15 பந்தகளுக்கு முகம் கொடுத்து 50 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate