திங்கள், 1 பிப்ரவரி, 2016

கொக்கட்டிச்சோலையில் முச்சக்கரவண்டி விஷமிகளால் தீக்கிரை


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் சனிக்கிழமை (31) அதிகாலை நான்கு மணியளவில் முச்சக்கரவண்டியொன்று இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  பனையறுப்பான கிராமத்திலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் பத்திரகாளி  அம்மன்  ஆலயத்திற்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஆலயத்தின்  பூசகரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன், இச்சம்பவம் தொடர்பில் தாம்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate