செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விவேகானந்தா மகளிர் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில் அவபாமியா இல்லம் சம்பியன்

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையின்  வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று செவ்வாய்கிழமை (09) பிற்பகல் 2.30 மணியவில் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆத்மீக அதிதியாக இராமகிருஸ்னமிஷன் சுவாமி ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தாஜீ மகராஜ் அவர்களும் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும் அழைப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனைக் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் , உடற்கல்வி உதவிக்கல்விக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார் ஆகியோரும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.சரவணபவான்,  காத்தான்குடி பொலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.வீ.வெதகெதர மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறுதில் அவபாமியா இல்லம் 381  புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், சாரதா இல்லம் 363 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், நிவேதிதா இல்லம் 357 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.



















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate