(என்டன்)
மட்டு - மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக உதவி தொகை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு பற்றி
யூனிட் பண்ட அமைப்பின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கத்தின்
நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வறுமை கோட்டின் கீழ் வாழும் வரியகுடும்ப மாணவர்களின் கல்வியை
ஊக்குவிக்கும் உதவி தொகை வழங்கும் நிகழ்வு வைத்தியர் கே .பி . சுந்தரேசன்
தலைமையில் மட்டக்களப்பு றோட்டரிக் கழக
மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன்
வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் , அருட்தந்தை எக்ஸ் .ஐ . ரஜீவன் ,அமைப்பின் தலைவர் வைத்தியர் கே ,பி . சுந்தரேசன் , அமைப்பின் செயலாளர் எஸ் . ஜெயகுமார் , முன்னால் அரசாங்க அதிபர் .சி .புண்ணியமூர்த்தி ,கலாநிதி திருமதி . சந்திரகாந்தா மகேந்திர நாதன், கலாநிதி .எம் .கோணேஸ்வரன் , கலாநிதி டி .பவன் , கல்லடி நொச்சிமுனை தரிசன பாடசாலை தலைவர் எம் .தயானந்தன் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர் .






0 facebook-blogger:
கருத்துரையிடுக