வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் களுவாஞ்சிக்குடியில் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மாடுகளை இன்று (12) வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டுள்ளனர்.


வாழைச்சேனையிலிருந்து கல்முனை நோக்கி  சிறியரக லொறியோன்றில் அளவிற்கு அதிகமான முறையில் 11 மாடுகளை கொண்டு சென்ற போது கழுவாஞ்சிகுடி பகுதியில் கடமையிலிருந்த போக்குவர்த்து பொலிசாரே கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாடுகளை கைப்பற்றிய பொலிசார் அவற்றை ஏற்றிவந்த வாகனத்தினையும், அதன் சாரதி உட்பட இருவரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  கழுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate