கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழகம் தெரிவாகிய சித்தாண்டி பிரதேச மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜாசிங்கம் கலந்துகொண்டிருந்தார்.
சித்தாண்டி சிகண்டி பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வு இன்று (01) திங்கள் கிழமை ஸ்ரீ சித்திரவேலாயுதர் பேராலய முன்றலில் நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வின் சாதனை மாணவர்கள் மற்றும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட அதிதிகள் வரவேற்க்கப்பட்டதையடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை பல்கலைகழகம் தெரிவான மாணவர்களில் அதிகமானவர்கள் மாவட்ட மட்டத்தில் பல முதன்மை நிலைகளை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையை பெற்றுக்கொடுத்திருந்தனர்.
அந்த வகையில் நடைபெற்ற சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுக்கு கௌரவ அதிதி கிழக்கு மாகாசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், சிறப்பு அதிதி கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஷ்ணராஜா, விவசாய அமைச்சின் பிரத்தியேக செயலாளர் தா.தங்கவேல், ஆசிரிய வளநிலைய முகாமையாளர் வ.பஞ்சலிங்கம், ஆலய வன்னிமை சி.பாலசந்திரன், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சித்தாண்டி சிகண்டி பவுண்டேஷன் இணைப்பாளர் மு.பிறேமகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாதனையாளர்களான மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களாலும் அதிதிகளினாலும் கௌரவிக்கப்பட்டனர்.
சித்தாண்டி சிகண்டி பவுண்டேஷன் குழுமம், சித்தாண்டி பிரதேச மக்கள் மற்றும் உதவி செய்யும் நல்ல உள்ளம்படைத்த உதவியாளர்களின் முயற்சியின் பயனாக கடந்த காலங்களில் இருந்து சித்தாண்டி பிரதேசத்தில் நடைபெறும் நல்ல பல நிகழ்வுகளை இவ் சிகண்டி பவுண்டேஷன் மிகவும் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடாத்திவருகின்ற வேளையில் இம்முறை இவ் சாதனை மாணவர்களின் கௌரவிப்பு அதனோடு இணைந்த ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த ஆசான்கள் அதிதகளையும் கௌரவிக்க தவறவில்லை, அனைவரும் கௌரவிக்கப்பட்ட சிறப்பானதொரு கௌரவிப்பு நிகழ்வாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

































0 facebook-blogger:
கருத்துரையிடுக