வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

நாளை கல்முனையில் சைனிங் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி!

(காரைதீவு  நிருபர்வி.ரி.சகாதேவராஜா) 

கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 34ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த ஒருமாத காலமாக நடாத்திய 42 கழகங்கள் பங்குபற்றிய மென்பந்துக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நாளை 13ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 2.30 மணிக்கு கல்முனை சைனிங் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அங்குரார்ப்பணவைபவத்தில்  பிரபல சமுகசேவையாளர் தொழிலதிபர் எஸ்.சந்திரசேகரம் ராஜன் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

நாளை இடம்பெறவிருக்கும் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றுப்போட்டியில் நான்கு பெரும் அணிகள் மோதவுள்ளன. அதற்காக  சவளக்கடை செல்வா அணி  பெரியநீலாவணை காவேரி அணி கல்முனை சைனிங் அணி வேப்பையடி  உதயா அணி ஆகிய 04 அணிகள் தெரிவாகியுள்ளன.

சைனிங்  வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டிக்கும் பரிசளிப்பு விழாவிற்குமான பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்திய சாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.

கௌரவ அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் உதவிவைத்தியஅத்தியட்சகர் டாக்டர்.சாமி.இராஜேந்திரன் நீர்ப்பாசனத் திணைக்கள கல்முனை பொறியியலாளர் எம்.திலகராஜ் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் கிழக்கிலங்கை இந்துசமய விழிப்புணர்வுச்சபையின் ஆலோசகர் ஆர்.சோமாஸ்கந்தன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறப்பதிதிகள் அதிதிகள் எனப்பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate