வியாழன், 16 ஜூலை, 2015

திருப்பெருந்துறையில் கிணற்றில் வீழ்ந்து ஐந்து வயது சிறுவன் பலி

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அவர்களின் எதிர்காலம் தொடர்பிலும் சிந்திக்காத பெற்றோரின் செயற்பாடுகளினால் இளம் வயதில் குழந்தைகள் பலியாவது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக செய்திவெளியிட்டுவருகின்றோம்.


அவ்வாறு பெற்றோரின் குழந்தைகள் மீதான அக்கரையின்மை காரணமாக ஐந்து வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் வீழ்ந்த ஐந்து வயது சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசதாhலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை திருப்பெருந்துரை கண்ணகியம்மன் ஆலய வீதியில் வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மு.பிரசாந்தன்(ழ5வயது)என்பவரே உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார்தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கடமையாற்றுவதாகவும் தாயார் கூலிவேலை செய்துவருவதாகவும் சம்பவ தினம் தயார் அருகில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிலேயே விட்டுச்சென்றதாகவும் இதன்போது கிணற்றில் குளிர்ப்பதற்காக சென்ற சிறுவன் கிணறில் தவறி வீழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் கொண்டுசெல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார்மேற்கொண்டுவருகின்றனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate