வெள்ளி, 10 ஜூலை, 2015

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க தற்காலிக அட்டைகள்

பொதுத்தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாளஅட்டை 
பெற ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டைகளோ தற்காலிக இடையாள இட்டையோ  இல்லாதவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டுக் கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வுதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை மத குருமாருக்கான அடையாள அட்டை, தேர்தல் திணைக்கள தற்காலிக அடையாள அட்டை 012, 2013 மற்றும் 2014 மாகாண சபை தேர்தல்களின் போது வழங்கப்பட்ட தற்காலிக அட்டை என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்காலிக அட்டை பெற விரும்புவோர் கிராம உத்தியோகத்தர்கள், தோட்ட அத்தியட்சகர்கள் ஊடாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate