வெள்ளி, 10 ஜூலை, 2015

கல்முனையில் தமிழ்க் கல்வி வலயத்தை உருவாக்கவேண்டும்.

கல்முனையில் தமிழ்க் கல்வி வலயமொன்றை  உருவாக்குவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி  எடுக்கவேண்டும் என்று மாநகரசபை உறுப்பினர் ஏ.விஜயரெத்தினம் நேற்று புதன்கிழமை (08) வேண்டுகோள் விடுத்தார். கல்முனை கல்வி வலயத்தில் 21 தமிழ்ப் பாடசாலைகளும் சம்மாந்துறை கல்வி வலயத்தில் 26 தமிழ்ப் பாடசாலைகளுமாக மொத்தம் 47  பாடசாலைகள் உள்ளன.  இந்தப் பாடசாலைகளை ஒன்றிணைத்து கல்முனையில் தமிழ்க் கல்வி வலயத்தை  உருவாக்கவேண்டும். தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர்; கிழக்கு மாகாணசபையில் கல்வி அமைச்சராக உள்ள இவ்வேளையில், இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate