திங்கள், 27 ஜூலை, 2015

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் இரு முச்சக்கர வண்டிகள் விபத்து –ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு நகரில் இன்று பிற்பகல் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று பிற்பகல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளைக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் திருப்பெருந்துறையில் இருந்து மட்டக்களப்பு வந்த முச்சக்கர வண்டியுமே இதன்போது மோதிக்கொண்டுள்ளன.

இதன்போது களுதாவளை முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ஸ்தலத்துக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate