செவ்வாய், 14 ஜூலை, 2015

வேட்பு மனுக்கல் பூர்த்தி –கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பு மனுக்கல் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று பூர்த்தியடைந்துள்ளன.


இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுடனான சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 30 சுயேட்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இதேநேரம் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாளர்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

மாவட்ட செயலகத்துக்கு வெளியில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தினை வெளிப்படுத்தியதை காணமுடிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இந்த மகத்தான ஆரவாரங்கள் செய்யப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு ஆதரவாளர்கள் மாலை அணிவித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து தமது பிரசாரப்பணிகளை ஆரம்பித்தனர்.

இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான பொன்.செல்வராசா உரையாற்றினார்.

















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate