களுவாஞ்சிகுடி
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிராதன வீதியில் இன்று (11.07.2015) மாலை
03.30 மணியளிவில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகுள்ளாகியதில்
இரு வாகன சாரதிகளும் காயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்
விபத்து தொடர்காக தெரிய வருவது தேற்றாத்தீவு பிரதேசத்தில் மரகறி விற்பனை நிலையத்தில்
இருந்து பொருட்களை வாங்கி விட்டு புறப்பட முச்சக்கர வண்டியும் களுவாஞ்சிகுடி நோக்கி
சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியதனால் இவ் விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படடுகின்றது.மேலும்
இவ் விபத்து சம்வம் தொடர்பாக களுவாஞ்சிகுடி
பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.









0 facebook-blogger:
கருத்துரையிடுக