சனி, 18 ஜூலை, 2015

இம்முறை தேர்தலில் அதிஸ்டத்தை பெறும் மட்டக்களப்பு மாவட்டம்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக அரச பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேட்சைக் குழுக்களுமான மொத்தம் 46 குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. 

இதனால், இந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே மிக நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அச்சிடப்படுகிறது. 

அதையடுத்து, கொழும்பு மாவட்டத்துக்கான வாக்குச்சீட்டு மிக நீளமானதாக அமைந்துள்ளது. 

இங்கு 36 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதால், சுமார் 2 அடி (24 அங்குலம்) நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்படுகிறது என்றும் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate