திங்கள், 27 ஜூலை, 2015

அரசையூர் பகியின் “முதல் மழை” கவிதை நூல் வெளியீட்டு விழா

அரசையூர் பகியின் “முதல் மழை” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை காலை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்; நடைபெறது.


கவிஞர் மேரா தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதிகளாக மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன்,மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நூலின் வெளியீட்டினை பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமும் நிதி உதவியினை உலக நண்பர்கள் அமைப்பும் வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் அதிதிகளினால் நூல் வெளியீடு செய்யப்பட்டதுடன் நூல் நயவுரையினை கவிஞர் த.சேரலாதன் நிகழ்த்தினார்.

இதன்போது நூலாசிரியர் பகி மற்றும் நூல் வெளியீட்டுக்கு உதவிகளை வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர்.




















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate