(வாழைச்சேனை நிருபர்)
கம்பகா மாவட்டம் சீதுவையைச் சேர்ந்த வலது குறைந்தோர் தொழில் பயிற்ச்சி நிலைய மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு கடந்த (16) வியாழக்கிழமை பாசிக்குடா கடற்கரையினை பார்வையிட வந்திருந்தனர்.
இதன்போது கல்குடா பொலிஸ் நிலையத்தினையும் பார்வையிட வருகை தந்திருந்தபோது நிலையப் பொறுப்பதிகாரி தர்மிக்க நவரட்ன அவர்கள் வரவேற்று சமுகமளித்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய நேர உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றினை வழங்கி வைத்தார்.
மேற்படி திடீர் ஏற்பாட்டினை ஒழுங்குபடுத்தியிருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சேவையினை பாராட்டி கல்விச் சுற்றுலாவில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.













0 facebook-blogger:
கருத்துரையிடுக