கிழக்கு மாகாண பாடசாலைக்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் இம்மாதம் 27ம்திகதி தொடக்கம் 30ம் திகதி வரை திருகோணமலை கந்தளாய் லீலாரெட்ண
ஞாயிறு, 31 ஜூலை, 2016
வெள்ளி, 29 ஜூலை, 2016
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
(எஸ்.ஸிந்தூ)
பட்டிருப்பு கல்வி வயலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினை மீள் உருவாக்கும் பொதுக் கூட்டம் இன்று(29.07.2016) வெள்ளிக்கிழமை பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் வித்தியால அதிபர் சிறிதரன் தலைமையில் பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகிய இவ் பொது கூட்டத்தில் முதற்கட்டமாக புதிய நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது.
29.07.2016- இன்றுமுதல் தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு இரண்டாம்தவணைவிடுமுறை
நாட்டிலுள்ள தமிழ் சிங்கள அரசபாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று 29ஆம் திகதி முதல் மூடப்படுகின்றன என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.இப்பாடசாலைகளில் இன்றுவரை இரண்டாம்தவணைப்பரீட்சைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதனால் இத்தவணைக்கான மாணவர் முன்னேற்றஅறிக்கையை இன்று வழங்கமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பாடசாலைகள் தள்ளப்பட்டுள்ளன.
வியாழன், 28 ஜூலை, 2016
சிவகலை வித்தியால பழைய மாணவர்களுக்கு அழைப்பு
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினை மீண்டும் உருவாக்கும் பொது கூட்டம் எதிர் வரும்(29.07.2016) வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் பி.ப 4.00 மணிக்கு அதிபரின் தலைமையில் இடம்பெறவுள்ளது,தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புதன், 27 ஜூலை, 2016
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வீரர்களுக்கு உதவி.
பட்டிருப்பு வலயத்தில் இருந்து மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்ற பாடசாலை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அவர்களது பிரயாணத்திற்கான ஊக்குவிப்பு தொகை
பழுகாமம் கேணிக்கரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்
கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் தென்பால் நீர்வளமும், நிலவளமும் நிறையப்பெற்று செல்வம் தழைத்தோங்கும் திருப்பழுகாமம் பதிதன்னில் கேட்பவர்க்கு கேட்டவரமளித்து அருள்பாலிக்கின்ற ஸ்ரீ கேணிக்கரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆடித்திங்கள் 12ம் நாள் (26.07.2016) ஆரம்பிக்கப்பட்டு
செவ்வாய், 26 ஜூலை, 2016
அரசியல் ஸ்த்திரத்தன்மை ஏற்பட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா
யுத்தத்தில்
சிக்கி தவித்த இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பவேண்டுமாகவிருந்தால்
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்.அந்த ஒத்துழைப்பினை
பெற்றுக்கொள்வதற்கு அரசியல் ஸ்த்திரத்தன்மை இந்த நாட்டில்
இருக்கவேண்டும்.அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
திங்கள், 25 ஜூலை, 2016
ஞாயிறு, 24 ஜூலை, 2016
சுயாதீன ஊடகவியலார் வடிவேல் சக்திவேல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது வழங்கி கௌரவிப்பு.
சனி, 23 ஜூலை, 2016
கொக்குவில்லில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

பழுகாமத்தில் திரௌபதியம்மன் ஆலய தீமிதிப்பு.
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருச்சடங்கின் தீமிதிப்பு வைபவமானது நேற்று (22.07.2016) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இத்தீமிப்பு வைபவத்தில் பல பிரதேசங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர் . அனைத்து பூசைகளும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மா.கு.தட்சணாமூர்த்தி நம்பியாரின் தலைமையில் இடம்பெற்றது.
நூற்றாண்டு காணும் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா - வீடியோ
நூற்றாண்டு காணும் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவுக்கான ஆயத்தமாக கொடியேற்றம் 22.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டி நோயல் இமமனுவேல் ஆண்டகையினால் கொடியேற்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டு முதலாவது நவநாள் திருப்பலியினையும் ஒப்புக்கொடுத்தார்.
வெள்ளி, 22 ஜூலை, 2016
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு
கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை கிழக்கு ஊடகவியலாளர்களின் ஒன்றியம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள், ஊடக நெறிமுறைகள், ஊடகம் புகைப்பட நெறிமுறைகள், முரண்பாட்டிலிருந்து மீளும் நிலையில் ஊடகங்களின் பொறுப்பு, பிரஸ் கவுன்சில் மற்றும் ஒழுங்குவிதிகள், அவதூறு வழக்குகள்: ஊடகங்கள், உரிமைகள், அவதூறு மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன.
மாவடிக் கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு
வியாழன், 21 ஜூலை, 2016
விபத்தில் இளைஞன் பலி, அதிர்ச்சியில் அப்பம்மா மரணம்.
பழுகாமம் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய வனவாசம்.
(பழுவூரான்)
ஏரோடும் வழியே நீரோடி நெல்விளையும், தமிழோடு சைவமும் சிறந்திலங்கும், கூத்தும் கும்மியும் கோலாட்டமும் கொடிகட்டிப் பறக்கும் பழம்பெரும் பதியான சிங்காரக்கண்டி என்று
செவ்வாய், 19 ஜூலை, 2016
சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையத்தினால் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு
(ப.ஜசாந்த்)
சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையம் அமைப்பின் ஏற்பாட்டிலும் திரு.ராஜன்(அவுஸ்ரேலி யா) அவர்களின் அனுசரணையிலும் பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
ஞாயிறு, 17 ஜூலை, 2016
இலங்கையின் - மட்டக்களப்பு தேசத்தில் நிலைபெற்ற சேரநாட்டுத் தாய்வழி மரபு
(1) சேரநாடு (2) தொண்டைநாடு (3) சோழநாடு (4) பாண்டிநாடு
பண்டைய முத்தமிழ் நாடுகளில் முதன்மை பெற்று விளங்கிய சேரநாடு நீண்டகால வரலாற்றுப் பெருமையைக் கொண்டது. சேரநாட்டின் எல்லைகள் குறித்து பெருந்தொகைப் பாடலொன்று பின்வருமாறு குறிப்பிடும்.
வடக்குத் திசைபழனி வான்கீழ் தென்காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதச்
சேரநாட் டெல்லையெனச் செப்பு
வெள்ளி, 15 ஜூலை, 2016
ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கற்படிமம் இனந்தெரியாதோரினால் சேதம்
ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கற்படிமம் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கற்படிமம் இன்று (15) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்க்ப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
யாரோ பிள்ளையைப் பெற்று வைக்க நாங்கள் இன்று பதிவு வைக்கின்றோம். சீ.யோகேஸ்வரன் பா.உ.
'யாரோ பிள்ளையைப் பெற்று வைக்க நாங்கள் பதிவு வைக்க வந்திருக்கின்றோம். ஆகவே இந்த அரசாங்கம் இதனை உணர்ந்துகொண்டு ஆயிரம் பாடசாலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகப்படியான பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை கொண்டுவந்து செயற்படுத்தி காட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த கிழக்கு மாகாணத்தில் அதிகாரிகள் தயக்கம். மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா சாடல்.
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு சம்ந்தப்பட்ட அரச அதிகாரிகள் தயங்குகின்றார்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அவர்கள் குற்றம் சாட்டினார்கள். கடந்த 12.07.2016ம் திகதி பட்டிருப்பு
பழுவூரில் பாரத நாயகிக்கு பெருவிழா.
வியாழன், 14 ஜூலை, 2016
அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
16 அத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே.பீ தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புதன், 13 ஜூலை, 2016
பழுகாமத்தில் தொழிநுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு.
ஈழத்து மேடை நாடக, வானொலி, திரைப்படக் கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் அவர்கள் மறைந்தார்
இலங்கையில்வானொலி - மேடை -திரைப்படம் - தொலைக்காட்சி என யாவற்றிலும் வலம் வந்து கலாரசிகர்களை தன் நகைச்சுவையால் மகிழ்வித்து வந்த இலங்கை மணித்திருநாட்டின் ஒப்பற்றதோர் கலைஞர் 'மரிக்கார்' எஸ்.ராம்தாஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தி எம் எல்லோரையும் கதிகலங்க வைத்துள்ளது. கோமாளிகள் கும்மாளம் எனும் வானொலித்தொடர் மூலம் இலங்கை வானொலி நேயர்கள் அனைவரையும் கவர்ந்து கொண்ட கலைஞர்களில் மரிக்கார் என்ற பாத்திரம் ஏற்று நடித்த எஸ்.ராம்தாஸ் அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்
தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா.
தமிழர் தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு, தமிழர் கலைகள் அருகி வரும் நிலையில், எமது இளைய சமுதாயம் பல்வேறு தகாத திசைகளில் கவரப்பட்டு தமிழரின் எதிர்காலமே மிகவும் ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இவ்வேளையில், எமக்கான கலைகளை வளர்த்து, கலாச்சாரத்தினை பாதுகாத்து, எமது இளைய சமுதாயத்தை சரியான திசையில் வழி நடாத்துவது இன்றைய வரலாற்றுத்தேவையாகும்.
செவ்வாய், 12 ஜூலை, 2016
ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 65வது குருபூசை தினத்தை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரதபவனி..
பாரத நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசன் மகனாக அவதரித்து ஈழமணி திருநாட்டின் இல்லமெல்லாம் நடமாடித்திரிந்து தன்னை ஒரு பித்தனாகவும் கேலிபண்ணுவதற்குரியவராகவும் வெளிக்காட்டி உள்ளன்புடன் நாடி வந்த பெரியார்களின் மனோநிலைக்கு ஏற்ப அருளுரைகளையும் அற்புதங்களையும் வெளிக்காட்டி சித்தராக பரிணமித்து காரேறுமூதூராகிய மட்டக்களப்பு காரைதீவு புனித பதியின் மூலகுரு மூர்த்தியாய் ஜீவசமாதி நிலையில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கின்ற ஜீவ சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 65வது குருபூசை தினத்தை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரதபவனி ஊர்வலமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாந்தாமலை முருகன் ஆலய பன்னிரண்டாம் நாள் திருவிழா
இலங்கையின் மிக பழமை வாய்த முருகன் ஆலயங்களில் ஒன்றான தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 30.06.2016 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் நேற்று (11.07.2016) திங்கட்கிழமை திருவிழாவினை குருக்கள்மடம், செட்டிபாளையம்,மாங்காடு, தேற்றாத்தீவு,களுதாவளை மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய ஆறு கிராம மக்கள் ஒன்று இணைந்து திருவிழாவினை நடாத்தினர்.
ஞாயிறு, 10 ஜூலை, 2016
சனி, 9 ஜூலை, 2016
காந்தி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கேதார ஈஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிசேக பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும்
மட்டக்களப்பு காந்தி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கேதார ஈஸ்வரர் ஆலயத்தின் பாற்குட பவனியும் சங்காபிசேகமும் இன்று நடைபெற்றது
இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு தேவ நற்கருணை உறுதிபூடுதல் வழங்கும் விசேட திருப்பலி
(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு தேவ அருள் அடையாளங்கள வழங்கும் விசேட திருப்பலி இன்று நடைப்பெற்றது
நாளை களுதாவளை பிள்ளையாரின் தீர்த்தோற்சவம்.
(பழுவூரான்)
மீன்மகள் பாட வாவிமகள் ஆடும், முத்தமிழின் அரங்கமாய் திகழும் மட்டக்களப்பின் தென்பால் தமிழோசை மணக்கும், தமிழர் பண்பாடு தவழும், நெற்கதிர்கள்
வெள்ளி, 8 ஜூலை, 2016
வியாழன், 7 ஜூலை, 2016
வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஜப்பான் விஜயம்
கடந்த
வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல
மாணவர்களில் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம்
இடத்தினைப் பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி
தக்சினியா பத்மசுதன் கல்வி அமைச்சின் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம்
ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கின்றார்.
புதன், 6 ஜூலை, 2016
நோயாளர்கள் நன்றி தெரிவிப்பதுடன், மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை என்கின்றனர்.
மட்டக்கள்பு போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைக்கு அதிகாலை இரண்டு மணிமுதல் நோயாளர்கள் வருகை தருவதாகவும், அவ்வாறு வந்தாலும் நாளுக்கு 15 நோயாளர்களை மட்டுமே புதிதாக பார்வையிடுவதாகவும் அண்மையில் ஊடகம் ஒன்றில் செய்தி வந்திருந்தது.
செவ்வாய், 5 ஜூலை, 2016
கிழக்கின் இளைஞர் முன்னணியினரின் சாதாரண தர மாணவர்களிற்கான இலவச கல்விக்கருத்தரங்கின் 4ம் தொடர்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தினை படியுயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின்(பிரதிப்பணிப்பாளர்,தேசிய மொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) திட்மிடலில் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் காணப்படும் திக்கோடை,மண்டூர்,தும்பங்கேணி,வெல்லாவெளி,கணேசபுரம் போன்ற பிரதேச பாடசாலைகளில் (க.பொ.த)சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களினை ஒன்றிணைத்து மட்-பட்-வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் மாதாந்த கருத்தரங்கின் நான்காம் தொடர் கடந்த மாதம் 25,26ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது.