வெள்ளி, 15 ஜூலை, 2016

சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த கிழக்கு மாகாணத்தில் அதிகாரிகள் தயக்கம். மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா சாடல்.

(பழுவூரான்)
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு சம்ந்தப்பட்ட அரச அதிகாரிகள் தயங்குகின்றார்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அவர்கள் குற்றம் சாட்டினார்கள். கடந்த 12.07.2016ம் திகதி பட்டிருப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும் கௌரவ ஆளுநர் அவர்களும் மட்டக்களப்பில் விமான நிலையம் மற்றும் வெபர் மைதானம் திறப்பு விழாவில் பங்குகொண்டு மேடையில் இருக்கும் போது கூட எல்லைப்புற கிராமங்களில் பெரும்பாண்மை இனத்தவர்கள் காடுகளை அழித்து காணிகளை அபகரித்து குடியேறுவதற்கான செயற்பாடு நடைபெறுகின்றது. 
எமது பிரச்சினைகள் ஆரம்பித்ததும் கூட இந்த காணி மற்றும் கல்வியில்தான்  இவ்வாறான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு சம்ந்தப்பட்ட அரச அதிகாரிகள் தயங்குகின்றார்கள். அண்மையில் கூட திருகோணமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அதே போன்று எமது தமிழ்ப் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்படியான சிறுசிறு தவறுகள் அரசாங்கத்தின் மீது சந்தேகத்தை ஏற்படு;வதற்கு வழிகோலிக்கொண்டிருக்கின்றது. 
நாங்கள் அமைதியாகத்தான் எங்களுக்கான தேவைகளை  நீதியான நியாயமான முறையில் சர்வதேசத்தின் அனுசரனையோடு பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எமது தலைவர்கள் அமைதியாக புத்திசாதூரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதைக்கூட எமது சமூகத்தை சேர்ந்தவர்கள் விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இருக்கின்றார்கள் என்ன செய்கின்றார்கள் மக்களே எங்களை தவறாக புரிந்து கொள்கின்றார்கள் இதற்காக  சிலர் மாஜாஜாலம் காட்டுகின்றார்கள். ஒருபக்கம் சிங்கள பேரினவாதம் எங்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது இன்னொரு புறம் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சனம் செய்து கொண்டு அதில் குளிர்காய எத்தனிக்கின்றார்கள். எமது மக்கள் ஒருபோதும் சோரம் போகமாட்டார்கள். என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, தொழிநுட்ப கல்வி கௌரவ அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்களும், கிழக்கு மாகாண கௌரவ விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம்  அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சீ.யோகேஸ்வரனும்; அவர்களும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் கௌரவ பிரசன்னா இந்திரகுமார் அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்களும், கௌரவ இ.துரைரெட்ணம் அவர்களும், கௌரவ மா.நடராசா அவர்களும் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்களும் கல்வி அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624981

Translate