பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நேற்று(12.07.2016) தொழிநுட்ப ஆய்வுகூடம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, தொழிநுட்ப கல்வி கௌரவ அமைச்சர்
சி.தண்டாயுதபாணி அவர்களும், கிழக்கு மாகாண கௌரவ விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஞா.ஸ்ரீநேசன் அவர்களும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் கௌரவ பிரசன்னா இந்திரகுமார் அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்களும், கௌரவ இ.துரைரெட்ணம் அவர்களும், கௌரவ மா.நடராசா அவர்களும் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்களும் கல்வி அதிகாரகளும் கலந்து சிறப்பித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக