பட்டிருப்பு வலயத்தில் இருந்து மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்ற பாடசாலை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அவர்களது பிரயாணத்திற்கான ஊக்குவிப்பு தொகை
மற்றும் சில வீரர்களுக்கு விளையாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய பாதணிகளினை இராசமாணிக்கம் மக்கள அமைப்பினால் வழங்கும் நிகழ்வு பட்டிருப்பு வலயத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் இன்று (27) இடம் பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய சி.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள்
'எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற திறமையான விளையாட்டு வீரர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக எதிர்காலத்தில் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது பகுதியை எடுத்துக் கொண்டால் அடிப்படை வசதிகள் இன்றி கடந்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். இதனால் தேசிய மட்டப் போட்டிகளிலே எமது வீரர்கள் திறமை இருந்தும் சில காரணங்களால் வெற்றிகளை ஈட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் எமது வீரர்களுக்கு கிடைக்கவில்லை. முதல் கட்டமாக நாங்கள் ஆரம்பித்திருக்கின்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்ற திட்டம் எதிர்காலத்தில் பாரிய அளவு வெற்றிகளை ஈட்டுவதற்கு உறுதுணையாக அமையும். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கான பயிற்சி முகாம்கள் தேகாரோக்கியத்தை வளர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் என்பனவற்றை எதிர்காலத்தில் செய்வதற்கு எமது அமைப்பு திட்டமிட்டிருக்கின்றது. இவ்வாறான வசதிகளைப் பயனபடுத்தி தேசிய ரீதியில் வெற்றி பெறவேண்டும். இதுதான் எங்கள் அமைப்பின் இலக்கு' என தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக