
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வெல்லாவெனி கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. இம்முறை எதிர்வரும் 28.07.2016ம் திகதி கந்தளாயில் நடைபெறவிருக்கும் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றும் விளையாட்டு
வீரர்களுக்கு ஓட்டபபாதணி அவ்வமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் அவர்களால் வழங்கிவைக்கப்ட்டது.
அவர் அங்கே கருத்து தெரிவிக்கையில், 'இவ்வாறான உதவிகள் என்னால் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து இந்த அமைப்பின் மூலம் வழங்கி வைக்கப்படுவதுடன் இன்னும் பல்வேறுஅடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஆனால் வீரர்கள் இவ்வாறான வசதிகளைப் பயன்படுத்தி தேசிய ரீதியில் வெற்றி பெறவேண்டும் என்றார். இந்த அமைப்பானது பட்டிருப்புத் தொகுதியில் மக்களுக்கு வாழ்வாதார வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான் கல்வி வசதிகள் திக்கற்று நிற்பவர் பலருக்கு பலவாறான உதவிகளை புரிந்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக