புதன், 31 ஆகஸ்ட், 2016
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016
திங்கள், 29 ஆகஸ்ட், 2016
வந்தாறுமூலை பொதுமயான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு .

வந்தாறுமூலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற வந்தாறுமூலை பொதுமயானத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் இடம்பெற்றது.
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான இணைப்பாய் அமைந்த படகுத்துறைகள்
(தி.லலிதன்)
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான இணைப்பாய் அமைந்த படகுத்துறைகள்...
மட்டக்களப்பு வாவியினால் இருகூறாக்கப்படும் மீன்பாடும் தேனாட்டின் மேற்குபுறமாய் அமைந்த பெருநிலப்பகுதி படுவான்கரை(சூரியன் படுவதால் அல்லது மறைவதால்) எனவும் சூரியன் உதிக்கும் கடலை எல்லையாக கொண்ட பகுதி எழுவான்கரை எனவும் அழைக்கப்படுதல் வழக்காறு.இந்த படுவான்கரையினையும் எழுவான்கரையினையும் நிலத்தினூடு இணைப்பவையாக இருப்பவை வலையிறவு பாலம் , பட்டிருப்பு பாலம் மற்றும் மண்முனைப்பாலம் ( கடைசியாய் அமைக்கப்பட்டது) என்பவையாகும்.
பழுகாமம் மாவேற்குடாப்பிள்ளையார் ஆலயத்திற்கு நீர்த்தாங்கி அன்பளிப்பு.
பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்.
கிழக்கிலங்கையில் மீன்மகள் பாட வாவிமகள் ஆடும் மட்டுமாநகரின் நிருதியிலே ஏரோடும் வழியே நீரோடி நெல் விளையும், மத்தளத்துடன் சதங்கை ஒலியும் வானைப்பிளக்கும், சுற்றிவர வாவியும் சுனைகளாலும் சூழப்பட்டு இயற்றை
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவில் கிருஷ்ன ஜெயந்தி விசேட பூஜை
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கிருஷ்ன ஜெயந்தி பூஜை முன்னிட்டு நேற்று(25.08.2016) வியாழக்கிழமை அதிகாலை மங்கல ஆராத்தியுடன் ஆரம்பித்து மாலை குழந்தை கிருஷ்னன் வீதியுலாவும் கிருஷ்னருக்கு ஸ்னபனா அபிசேகமும் கிருஷ்ன பகவானுக்கு விசேட பூஜையை தொடர்ந்து குழந்தை கிருஷ்னரை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடும் நிகழ்வும் இடம் பெற்றது.இதன் போது பக்தி பஜனை நிகழ்வுகளும் சமய சொற்பொழிவுகளும் இடம் பெற்றது.
வியாழன், 25 ஆகஸ்ட், 2016
பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய மஹோற்சவம் நாளை.
(தாஸ்)
கிழக்கிலங்கையில் மீன்மகள் பாட வாவிமகள் ஆடும் மட்டுமாநகரின் நிருதியிலே ஏரோடும் வழியே நீரோடி நெல் விளையும், மத்தளத்துடன்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவம்
இலங்கை திருநாட்டில் சிறப்புற்று விளங்கும் சுயம்பு லிங்க ஆலயங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் எதிர்வரும் 03.09.2016 அதிகாலை 4.30மணிக்கு இடம்பெற்று தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஆலயத்திருவிழாவும், 08.09.2016ம் திகதியில் இருந்து குடித்திருவிழாக்களும் நடைபெறவுள்ளது.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016
பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் தாக்குதல்
பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியதாகவும் சம்பவம் நடந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன .
சனி, 20 ஆகஸ்ட், 2016
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான அறிவுறுத்தல்...
![]() |
இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மடிப்பிச்சை இடல்
(தி.லலிதன்)
![]() |
மரபுகளும் பண்பாட்டு விழுமியங்களும் வேரோடிக்கிடக்கும் எங்கள் மண்ணின் இன்னொரு ஆன்மீக ரீதியான நிகழ்வு “மடிப்பிச்சை’ கோரலும் இடுதலும்.இது பெரும்பாலும் கண்ணகை மற்றும் மாரி அம்மன் கோவில்கள் நிகழும் வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் நிகழ்கிறது.பெண்களுக்கு உரித்தேயான பிரத்தியேக வழிபாட்டு முறை இது.மடிப்பிச்சை எடுக்கும் தினமன்று அதிகாலையிலேயே குளித்து முழுகி சேலை அணிந்து தயாராகி விடும் பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இந்த கைங்கரியத்தை காலை ஏழு மணி அளவில் ஆரம்பிப்பார்கள்.கையில் “பத்திரகொத்து’ எனப்படும் வேம்பிலைகளை வைத்துக்கொண்டு அயல் வீடுகளுக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்று தங்கள் சேலையின் கொசுவத்தை விரித்துக்கொண்டு “அம்மனின் பெயரினால் மடிப்பிச்சை இடுங்கள்’ என கோரிக்கை வைப்பர்.இதற்கென எல்லா வீடுகளிலும் தயாராய் நெல் இருக்கும்.அந்த வீட்டின் பெண்களோ அல்லது சிறுமிகளோ வந்து கேட்கும் பெண்களுக்கு சிறிய பாத்திரம் அல்லது “தாம்பளத்தினால்’ மடிநெல்லினை இடுவர்.
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016
மொட்டவிழும் மெட்டுக்கள் தந்த ஒலிபெருக்கி காலங்கள்
கிட்டதட்ட 1980 களின் முற்பகுதி தொடங்கி 2000 இன் முற்பகுதி வரை ஒரு விழாவின் சிறப்பினை தீர்மானிப்பவையாக இருந்தவை இந்த ‘ஒலிபெருக்கிகள்” அல்லது ‘ஸ்பீக்கர்கள்”. ஒருவர் நமது வீட்டுக்கு வந்து அழைப்பிதழ் தந்து விட்டு சென்றால் அடுத்து நாம் எதிர்பார்ப்பது அந்த வீட்டில் ஒலிபெருக்கி பாடுகிறதா இல்லையா என்பதனையே.விழாவுக்கான திட்டமிடுதல்களில் முதலில் தீர்மானிக்கப்படுவது “ஸ்பீக்கர்” எடுப்பதா இல்லையா என்பது பற்றியே.
பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றான “சுளுக்கு பார்த்தல் அல்லது உளுக்கு பார்த்தல்”
(தி.லலிதன்)
![]() |
இற்றைக்கு இரண்டு தசாப்தங்களின் முன்னரான எனது கிராமத்தின் வைத்திய மரபுகளில் ஒன்றாக இந்த “சுளுக்கு பார்த்தல் அல்லது உளுக்கு பார்த்தல்” காணப்பட்டது.இந்த சுளுக்கு எனப்படுவது உடலின் யாதேனும் ஓர் பகுதியில் ஏற்படுகின்ற தசைக் கிழிவினை குறிக்கும்.இந்த தசைக் கிழிவானது தசை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருந்தமையினால் மிகுந்த வலியை தரும் ஒன்றாய் இருந்தது.ஆனால் இந்த வகையான உபாதைகளுக்கு மக்கள் நோ நீக்கி மாத்திரைகளை உட்கொள்வதையோ அல்லது வைத்தியரிடம் செல்வதையோ தவிர்த்து இந்த சுளுக்கு பார்த்தலினையே தேர்வு செய்தனர்.
வியாழன், 18 ஆகஸ்ட், 2016
குறுணை/குருணல் சோறு
(தி.லலிதன்)
![]() |
அந்த நாட்களில் இப்போது மாதிரி அரிசி பைகளில் அடைக்கப்பட்டு வருவதில்லை.நெல் வாங்கி ஊரில் இருக்கும் அரிசி ஆலைகளில் குற்றித்தான் எடுக்க வேண்டும் அல்லது உரலில் போட்டு குற்றி குத்தரிசியாக்கி எடுக்க வேண்டும்.நாங்கள் நெல் குற்ற கொடுத்தால் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியுடன் சேர்த்து கொஞ்சம் இடிந்த அரிசி அதாவது நன்றாக உடைந்த அரிசியையும் சேர்த்து தருவார்கள்.இந்த உடைந்த அரிசியை தமிழ் அகராதியின்படி “குறுணை” என்பர்.பேச்சு வழக்கில் ‘குருணல்” என்பர்.சிறிய நெல் என்பதை குறிக்க அது குறு நெல் ஆகி பின்னர் குருணல் ஆகியதாயும் கூறுவதுண்டு.இதை நான் ஆங்கில அகராதிகளில் தேடியபோது rice grit என்ற பதம் கிட்டிற்று.
புட்டுக்களி அவித்துப் போதல் / புட்டவித்துப் போதல்.
(தி.லலிதன்)
தமிழர் வாழ்வியலில் முற்றிலும் அற்றுப்போன ஒரு வழமையாக "புட்டுக்களி அவித்துப் போதல்" காணப்படுகிறது.இந்த "புட்டுக்களி அவித்துப் போதல்" என்பதன் சரியான வரிவடிவம் "பிட்டுக்களி அவித்துப் போதல்" என்பதாகும்.இந்த முறைமையின் விளக்கம் பின்வருமாறு...தமிழக்குடும்பங்களில் ஒரு பெண்பிள்ளை ருதுவானதும் அல்லது பருவமடைந்ததும் (கிராமப்புறங்களில் இதனை பெரிய பிள்ளையாதல் என்பர் ) அயலவர்களும் உறவினர்களும் நல்லெண்ணை , நாட்டு முட்டை மற்றும் எள்ளு போன்றவற்றை அன்பளிப்பாய் கொண்டு கொடுப்பர்.
மட்டக்களப்பின் கிணறு வெட்டும் பாரம்பரியங்கள் மற்றும் “பரத்தை சோறிடல்”
(தி.லலிதன்)
முந்தைய நாட்களில் மட்டக்களப்பில் கிணறு தோண்டுதல் என்பது கூலிக்குரிய விடயமன்று.மாறாக அந்த பகுதி இளையவர்களால் செய்யப்படும் உபகாரம் போன்றதே கிணறு தோண்டுதல் ஆகும்.இதற்குரிய காரணமாவது யாதெனில் நீர் என்பது ஒருவனின் வாழ்வில் இரு விழிகள் போன்றது.விழிகள் போன்ற இந்த நீரானது இறைவனால் அருளப்பட்ட கொடை போன்றது.எனவே இந்த நீரினை கண்டடைய எடுக்கும் முயற்சிக்கு பணம் பெறுவது பாவகாரியமாகும் என்பது பண்டைய நம்பிக்கையாகும்.
சனி, 13 ஆகஸ்ட், 2016
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கண்பார்வையிழந்த மாணவனுக்கு உதவி.
அரசடித்தீவைச் சேர்ந்த கண்பார்வையிழந்த மாணவனான பா.பிரசோபனுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன் அவர்களால் தட்டச்சு இயந்திரம் மற்றும் பாடசாலைக்கான உபககரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினர் கல்விக்காக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 11 ஆகஸ்ட், 2016
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள்
(சுஜா)
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நூறாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நேற்று புதன் கிழமை (10) பல நிகழ்வுகள் நடைபெற்றன.
வருடாந்தம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியாலைத் தினம் கொண்டாடப்பபட்டு வருகின்றது.மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் அமையப் பெற்றுள்ள ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் இவ்வைத்திய சாலையில் மிக நீண்டகாலமாக நிலவிவந்த விசேட வைத்திய நிபுணர்கள் தங்குமிடத்திற்குரிய இரண்டு மாடிக் கட்டடத்திற்குரிய அடிக்கல் நடப்பட்டது இக்கட்டடம் 11 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அடையப்பெறவுள்ளது.அதனைத் தொடர்து இதுவரை காலமும் பிராந்திய சுகாதாரப் பணிமiனியில் மாத்திரம் நடைபெற்றுவந்த தடுப்பூசி போடும் நிகழ்வு வைத்தியசாலைகளுக்கும் விஸ்த்தரிக்கப ;பட்டுள்ளதனால் தடுப்பூசிபோடும் பிரிவும் இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் கிரேஸ் நவரெட்ணராஜா பிரதம அதிதியாக இதன்பொது கலந்து கொண்டிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள், கிராம பெரியோர்கள், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
மட்டு. பொருளாதார மத்திய நிலையம். மாகாண சபையில் தனிநபர் பிரேரணை.
(ரூபதாஸ்)
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது நான் தனிநபர் பிரேரணை ஒன்றிணை கொண்டுவரவுள்ளளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். இன்று (08.08.2016) போரதீவுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணியில்
திங்கள், 8 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவில் வாகன விபத்து! ஒருவர் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் சனிக்கிழமை(06.08.2016) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சனி, 6 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நாகசதுர்த்தி விஷேட பூசை !

நாக சதுர்த்தி விரதத்தினை முன்னிட்டு வராலாற்று சிறப்பு மிக்க தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் 06.08.2016 நாகசதுர்த்தி தினத்தன்று விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இவ் விரத நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்பும் அடியவர்கள் மாலை 3.30 மணிக்கு முன்னதாக ஆலயத்துக்கு வருகை தருமாறு வேண்டப்படுகின்றிர்கள்.
வியாழன், 4 ஆகஸ்ட், 2016
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் குரு பெயர்ச்சி ஹோமம்
(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இன்று (04.08.2016) வியாழ்கிழமை காலை 08.30 மணிக்கு குரு பெயர்ச்சி ஹோமம் ஆலயத்தின் பிரதம குரு க.கு.சீதாராம் குருக்கள் அர்வகளின் தலைiமையில் இடம் பெற்றது இவ் குரு பெயர்ச்சி ஹோமத்தில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் தங்களது தோஷ நிவர்த்திக்கான பரிகாரங்களை செய்தனர்.
தேற்றாத்தீவில் பாதசாரி கடவைக்கு அருகில் வாகன விபத்து
(எஸ்.ஸிந்தூ)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (04.08.2016) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பாதசாரி கடவை அருகில் பாதையை கடக்க முற்பட்டவருக்கு வழிவிட்டு நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக டிப்பார் வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிள் சாரதி 10 மீற்றார் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கபப்ட்டுள்ளார்
புதன், 3 ஆகஸ்ட், 2016
மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் புதிய ஆலய நேர்ந்தளிப்பும், வருடாந்த திருவிழாவும்
மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் புதிய ஆலய நேர்ந்தளிப்பும், வருடாந்த திருவிழாவும் எதிர்வரும் (5) வெள்ளிக்கிழமை ஆலய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது.
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016
பழுகாமம் கேணிக்கரைப் பிள்ளையார் ஆடிஅமாவாசை தீர்த்தம்.
கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் தென்பால் நீர்வளமும், நிலவளமும் நிறையப்பெற்று செல்வம் தழைத்தோங்கும் திருப்பழுகாமம் பதிதன்னில் கேட்பவர்க்கு