புதன், 30 செப்டம்பர், 2015

ஏறாவூர் பற்றுக் கோட்டத்தில் கற்றல் உபகரணக் கண்காட்சி

மட்டக்களப்பு மேற்கு வலய ஏறாவூர் பற்றுக்  கோட்ட பாடசாலைக்கு இடையிலான  ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் உபகரண கண்காஏட்சியும் போட்டியும் இன்று கரடியனாறு   மகா  வித்தியாலயத்தில் கோட்டக் கல்வி அதிகாரி எம்.முருகேசபிள்ளை அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) எஸக.ஹரிகரராஜ்,  உதவிக்  கல்விப் பணிபணிப்பாளர் ஆரம்பக்கல்வி) எம். மாணிக்கப்போடி, வித்தியாலய  அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








Share:

சமுதாயத்தில் நல்ல சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய ஊடகமாக மாணவர்கள் திகழ முடியும் : உதவிப் பிரதேச செயலாளர் என். நவரூபரஞ்சினி

சமுதாயத்தில் நல்ல சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவந்து செயற்படுத்தக் கூடிய ஊடகமாக மாணவர்கள் திகழ முடியும் என மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் என். நவரூபரஞ்சினி தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பிரதேசப் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட தெங்கு தவிர்ப்பு சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்கள், ஆசியரியர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஐ. சிறிநாத் தலைமையில் செங்கலடிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். கிருஷ்ணபிள்ளை, ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் கீர்த்தி பிறேமதிலக உள்ளிட்ட அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி கூறியதாவது, டெங்கு நோய் என்பது நாட்டையும் வீட்டையும் அச்சுறுத்துகின்ற ஒன்றாக தற்சயமம் மாறியுள்ளது.
இந்த அச்சுறுத்தலை வெறுமனே சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரமோ அன்றேல் நிருவாக அதிகாரிகள் மாத்திரமோ தனித்தனியே ஒழித்துக் கடம்டிவிட முடியாது.

இது ஒது கூட்டு முயற்சியினால் சாதிக்க வேண்டிய விடயம். அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கூடாக டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள், அதிபர்கள், ஏனைய அதிகாரிகள் இருந்து பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்டி வீட்டையும் நாட்டையும் பாதுகாக்க முடியும்' என்றார்.

பிரதேசப் பாடசாலை மாணவரிடையே நடத்தப்பட்ட டெங்க ஒழிப்பு சித்திரம் வரைதல் போட்டியில் செங்கலடி மத்திய கல்லூரில் ஏழாம் ஆண்டு கற்கும் மாணவி என். சுதர்ஷிகா முதல் பரிசான ஐயாயிரம் ரூபாவையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஐ. சிறிநாத் தலைமையில் செங்கலடிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். கிருஷ்ணபிள்ளை, ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் கீர்த்தி பிறேமதிலக உள்ளிட்ட அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








Share:

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் உபகரணக் கண்காட்சி போட்டி

மட்டக்களப்பு மேற்கு வலய மண்முனை மேற்கு கோட்ட பாடசாலைக்கான ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் உபகரண கண்காட்சியும் போட்டியும் இன்று கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் கோட்டக் கல்வி அதிகாரி ரி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்வி  பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எஸ்.மகேந்திரகுமார், வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.















Share:

“பிள்ளைகளைக் காப்போம்” என்னும் தொனிப்பொருளில் களுவாஞ்சிகுடியில் கவன ஈர்ப்பு பேரணி

“பிள்ளைகளைக்காப்போம்” என்னும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.
Share:

மாமாங்கம் பகுதியில் முன்னாள் மாநகரசபை உறுப்பினரின் மனைவியின் தாலிக்கொடியை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவியின் தாலிக்கொடி இனந்தெரியாத நபர்களினால் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
Share:

பட்டதாரிகளின் உண்ணாவிரத போராட்டம்

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் கிழக்கு மாகாண சபையின் முன்பு இன்று காலை முதல்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது



Share:

செங்கலடியில் சிறுவர் தின விழிப்புணர்வு

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு “பிள்ளைகளை உயிர் போல் காப்போம்” எனும் தொழிப்பொருனில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளம் இணைந்து செங்கலடி மத்திய கல்லூரி முன்றலில் விழிப்பூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Share:

செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கோட்டக்கல்வி அதிகாரி பொ.சிவகுரு, கல்லூரியின் முன்னாள் அதிபர் வ.கந்தசாமி, அயல்பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் 550 மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
  
Share:

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

புதுக்குடியிருப்பில் பாரிய விபத்து –ஒருவர் பலி -மூவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
Share:

அகில இலங்கை சைவசமய போட்டியில் மத்திய கல்லூரி மாணவன் சாதனை

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தரம் 07 இல் கல்வி பயிலும் செல்வன். சீ. மதுசாங்கன் அகில இலங்கை விவேகானந்த சபையால் நடாத்தப்பட்ட சைவசமய போட்டிப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Share:

1200 பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் மற்றும் நவீன மலசல கூட வசதிகள்

கல்வி அமைச்சர்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 1200 பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் நவீன மலசல கூட வசதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கென ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் தலா 02 மில்லியன் ரூபா வழங்கப் படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று (28) கல்விமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு கல்வியமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டில் உள்ள 10119 பாடசாலைகளில் 525 பாடசாலைகளில் மட்டுமே ஒழுங்கான குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் உள்ளன. ஏனைய பாடசாலைகளில் மலசல கூடங்கள் உடைந்து காணப்படுகின்றன. இதற்காக கல்வியமைச்சு ஆண்கள் பெண்களுக்கென தனியான மலசல கூடங்களை நவீன முறையில் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக 1200 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மிக அண்மையிலான சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. 2017 ம் ஆண்டில் சகல பாடசாலைகளுக்கும் மலசல கூட வசதிகள் வழங்கப்பட்டு இதனால் இக் கட்டுமான பணிகள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திடமும் அதிபரிடமும் கையளிக்கப்படும்.

இதற்காக வலயக் கல்விப் பணிப்பாளர் கல்வியியல் பிரிவின் பொறியியலாளர் மற்றும் மாகாண தேசிய பாடசாலைகளினதும் கல்வியமைச்சின் அதிகாரிகள் இத்திட்டத் தினை அவதானிக்கும் குழுவாக நியமிக்கப்படுவார்கள். இத்திட்டத்திற்கான நிதி 2015, 2016ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பெறப்படும் என கல்வியமைச்சர் காரியவசம் இங்கு தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகளுக்கு மலசல கூட சுத்திகரிப்பாளர் தொழிலுக்கு க.பொ.த. சாதாரண தரம் 6 பாடங்கள் சித்தியெய்திருக்க வேண்டும்.

ஆனால் இவ்வாறு சித்தியடைந்தவர்கள் இத் தொழிலுக்கு விருப்பமில்லாமல் உள்ளனர். 8ஆம் ஆண்டு சித்தியடைந்தவர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கு பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சிற்கு எழுதியுள்ளோம்.

அதன் அனுமதி கிடைத்ததும் 8ம் வகுப்பு சித்தியடைந்த வர்களை மலசல கூட சுத்திகரிப்பு தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
Share:

இரத்ததானம் தேற்றாத்தீவில்

(இலக்கி)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  தேற்றாத்தீவில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஒரு  செயல்திட்டத்தின் கீழ் இன்று (29.09.2015)  செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணியளவில் கொம்புச் சந்திப்பிளையார் ஆலய முன்றலில்  
இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது

இதில் தேற்றாத்தீவின் மன்றங்கள்சங்கங்கள்,கழகங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இச் செயல்  திட்டத்தின் ஊடாக பலர் இரத்த தானம் வழங்கினர்.







Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate