செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வாகரையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – பெருமளவான கசிப்பு சிக்கியது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டதுடன் பெருமளவான கசிப்பினையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டான்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் என்.சோதிநாதனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் சென்ற இன்ஸ்பெக்டர் ஏ.ஆனந்தநாயகம்,சார்ஜன்ட் எஸ்.ஜனாநந்தா, மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான வசந்த புஸ்பகுமார,ஏ.ரஜனிக்காந்த ஆகியோர் கொண்ட குழுவினரே இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கான செப்பு மற்றும் ஸ்பிரிட்ட உட்பட மூலப்பொருட்கள் மற்றும் இரண்டு வறல்கள்,45லீற்றர் கசிப்பு என்பனவற்றை கைப்பற்றியதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 14ஆம் திகதி வாகரை நீதிமன்றில்ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான தயாரிப்புகளை தடுக்கும் வகையில் மதுவரித்திணைக்களம் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate