வியாழன், 24 செப்டம்பர், 2015

மண்முனை வடக்கு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வாசிகசாலைகளுக்கு நூல்களும் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

வோர் சைல்ட்  ஹொலன்ட்  நிதி உதவியுடன்  எஸ்கோ நிறுவனம்  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 24 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் வாசிகசாலைகளுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டன.

கிராம மட்டத்தில் இயங்கி வருகின்ற சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழுக்களையும்  சிறுவர் சங்கங்களையும் இணைத்துக்கொண்டு சிறுவர் உரிமை பாதுகாப்பு , பங்களிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு  சிறுவர்களையும் ,வளர்ந்தவர்களையும் வலுவூட்டி வரும் செயற்றிட்டத்தின் கீழ் இவை வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் இன்று புதன்கிழமை மாலை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  எஸ்கோ நிறுவன திட்ட இணைப்பாளர் கே .சிவாகரன் , நிறுவன அதிகாரி செல்வா ,மண்முனை வடக்கு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ் . உதயராஜ் ,  கிராம சேவை உத்தியோகத்தர்கள்  மற்றும்  கிராம கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .
















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate