வழிகாட்டிகள் பூங்கா என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விஞ்ஞானக் கண்காட்சியில் விஷேட தேவையுடையோருக்காக காவிச்செல்லக் கூடிய, நெகிழ்வுத் தன்மையுள்ள, சீராக்கம் செய்யக் கூடிய பற்தூரிகையைக் கண்டு பிடித்தமைக்காக விஞ்ஞான புத்தாக்குநர் பிரிவில் மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரியின் தரம் 9 மாணவி றொமிக்கா அன்ரூவ் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
கண்காட்சியின் இறுதி நாளான ஞாயிறு இரவு விஞ்ஞான புத்தாக்குநர் போட்டியில் வெற்றி பெற்ற புத்தாக்குநர்களுக்கு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை கேட்போர் கூடத்தில் வைத்து சான்றிதழ் வழங்கப்பட்டன.
முதலிடத்தைப் பெற்ற றொமிக்கா கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அன்ரனி அன்ரூவ் வின் புதல்வியாகும்.
செப்டெம்பர் 24 தொடக்கம் 27வரை விஞ்ஞான மாதிரிகள்,புத்தாக்கப் போட்டி, நேரடி விஞ்ஞானப் பரிசோதனைகள், கலை கலாச்சாரம்), வானியல்,செயற்பாடுகள்), பாரம்பரிய உணவுகளும் சிற்றுண்டிகளும், விஞ்ஞானத்தை சந்திக்கும் கலைஞன்), ஆகியவற்றுடன் தினமும் காலையும் மாலையும் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் வழங்கும் மௌனகுருவின் “தாண்டவ தகனம்”-- மகாபாரதப் போரின் பின்னணியில் இருந்த இயற்கை அழிப்பை அடிப்படையாகக் கொண்ட நவீன நாடகம், கண்காட்சி இடம்பெற்ற 4 தினங்களும் மாலை வேளையில் தினமும் வீதி நாடகங்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பில் முதன் முறையாக இந்த விஞ்ஞானக் கண்காட்சி இடம்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக