வியாழன், 24 செப்டம்பர், 2015

சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாகனங்கள் மீது சட்டநடவடிக்கை

வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் செல்லும் சூழல் மாசுபடக்கூடிய வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை பரிசோதிக்கும் விஷேட நிகழ்வு நேற்று (22) செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. 

காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவும், மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் இணைந்து மேற்படி வாகனங்களை பரிசோதிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

இவ்வாகன பரிசோதனையின் போது மக்களுக்கு தீங்கு ஏற்படும் மற்றும் சூழல் மாசுபடக்கூடிய 38 வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதில் மோட்டார் சைக்கிள்கள் 11, வேன் 6, லொறி10, முச்சக்கர வண்டி 07, பஸ் 04 உள்ளிட்ட இலகு ரக மற்றும் கணரக வாகனங்களும் அடங்குகின்றன. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate