செவ்வாய், 22 செப்டம்பர், 2015

தேசிய கடல்கரை சுத்திகரிப்பு தின மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம் கல்லடி கடற்கரையில்

தேசிய கடல் கரை சுத்திகரிப்பு தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இன்று நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை கல்லடி கடற்கரை பிரதேசத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்திவருகின்றது.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட திணைக்களங்களின் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொது மக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய எட்டு பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதான கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

25 பிரிவுகளாக இந்த பிரிவுகள் பிரிக்கப்பட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இதன்மூலம் 50 கிலோமீற்றர் தூரமான கடற்பகுதிகளில் தூய்மைப்படுத்தப்படவுள்ளன.


























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate