புதன், 23 செப்டம்பர், 2015

வெல்லாவெளியில் யானை தாக்குதலால் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாச்சொலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யானை தாக்குதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலாச்சோலையை சேர்ந்த க.அருளானந்தம்(35வயது)என்பவரே படுகாயமடைந்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் பகுதிகளுக்குள் நுழைந்த யானையை விரட்ட முனைந்தபோதே யானை இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate