செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நாடளாவிய ரீதியில் 11000 ஆசிரியர்கள் மேலதிகமாக இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் 11,000 ஆசிரியர்கள் மேலதிகமாக இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளிலும் சுமார் 2,000 ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

எனினும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சித்திரம் மற்றும் சங்கீதம் ஆகிய பாடங்களுக்கு தொடர்ந்தும் ஆசிரிய பற்றாக்குறை நிலவுகின்றது.

ஒருசில தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் அதிகளவிலான சம்பளம் காரணமாக அநேகமான பட்டதாரிகள் அந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்துள்ளமையே ஆசிரிய பற்றாக்குறைக்கு காரணம் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate