திங்கள், 28 செப்டம்பர், 2015

டுபாய் நாட்டில் திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

டுபாய் நாட்டில் நேற்று சனிக்கிழமை(26) மாலையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும் குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்ட பிச்சைத்தம்பி பாஹிம் வயது(36) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு  உயிழந்துள்ளார்.
கடையொன்றில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டு வீதிக்கு வந்த இவரை எதிர்பாராத விதமாக வாகனமொன்று மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate