திங்கள், 28 செப்டம்பர், 2015

செங்கலடியில் விறகு சுமந்து சென்ற பெண்னொருவர் வடிகானுள் வீழந்த பலி

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில் விறகுக் கட்டை தலையில் வைத்துச் சுமந்து சென்ற வயோதிபப் பெண்ணொருவர் திங்கட்கிழமை இரவு வடிகானுக்குள் விழுந்து மரணித்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி ரமேஸ்புரம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த தாமோதரம் யோகநாயகி (வயது 65) என்பவரே இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இந்த வயோதிபப் பெண் பதுளை வீதியிலுள்ள பங்குடாவெளிக்குச் சென்று விறகு சேகரித்து விட்டு வீடு திரும்பும்போது வடிகானுக்குள் விழுந்து மரணித்துக் கிடந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate