புதன், 23 செப்டம்பர், 2015

மண்டூரில் காட்டு யானை தாக்கியதினால் ஒருவர் உயிரிழப்பு –தொடரும் அவலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர்,நெல்லுச்சேனை பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று புதன்கிழமை மாலை நெல்லுச்சேனை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரே இவ்வாறு யானை தாக்குதலுக்குள்ளானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர் மண்டூர்,14ஆம் கொலணியை சேர்ந்த சோமசுந்தரம் தர்மரட்னம் (65வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



நேற்று செவ்வாய்க்கிழமையும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலையில் யானை தாக்குதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate