செவ்வாய், 22 செப்டம்பர், 2015

வாழைச்சேனை கடதாசி ஊழியர்களின் சம்பள நிலுவை வழங்கக் கோரி மகஜர் கையளிப்பு

கடந்த நான்கு மாத சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலிடம், வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான சம்பள நிலுவையும் 2015ஆம் ஆண்டில் ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வழங்கப்படவில்லை. அத்துடன், கடந்த ஜுலை மாதச் சம்பளம் இரண்டு தடவைகளாக 70 வீதம் வழங்கப்பட்டதாகவும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (18) முதல் ஆலைக்கு முன்பாக நான்கு நாட்களாக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஆலைக்கு முன்பாகவிருந்து பேரணியாக ஊழியர்கள் ஓட்டமாவடிப் பிரதேச செயலகம் வரை சென்று தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்துள்ளனர். 'எங்களுக்கு சம்பளத்தை வழங்கு அல்லது எங்களை சுய விருப்பத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கு' உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் இவர்கள் தாங்கியிருந்தனர்.
கடதாசி ஆலை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக கிடைத்துள்ள இந்த மகஜரை மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைத்து அவர் மூலமாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate